பக்கம்:வைணவ உரைவளம்.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 465 கறுமா விரைகாள் மலரடிக்கீழ்ப் புகுதல்; அன்றி, அவனடியார் சிறுமா மனிச ராய்என்னை ஆண்டார் இங்கே திரியவே! (உறுமோ-தகுமோ, பாவியேனுக்கு-பாவியாகிய எனக்கு; உடன்நிறைய-ஏககாலத்தில் நிறை யும்படி; சிறுமா மேனி-கிறிய பெரிய திரு மேனியை; நிமிர்த்த-வளரச் செய்த; திருக் குறளன்-வாமனன்; நறுமா விரை-மிக்க பரிமளம் வாய்ந்த, புகுதல் - சேர்தல், அடியார்-பாகவதர்கள்; சிறுமாமனிசர்-வடி வில் சிறுத்து அறிவில் பெருத்தவர்கள்; ஆண்டார்-ஈடுபடுத்திக் கொண்டவர்கள்) இது பாகவதர்கட்குத் தாம் அடிமையாயிருக்கும் உண்மையை ஆழ்வார் பேசுவதாக அமைந்த திருவாய் மொழியில் உள்ள ஒரு பாசுரம். இதில் அவர், வடிவில் சிறுத்தவர்களாய் அறிவில் பெருத்தவர்களாய் மனித வடிவினராய் என்னை அடிமை கொண்டவர்களான அவன் அடியார்கள் இந்த உலகத்திலே சஞ்சரித்துக் கொண்டிருக்க (அவர்களுடைய மலரடிக்கீழ்ப் புகுதல்) அன்றி, இந்த உலகங்கள் மூன்றும் ஒரு சேர நிறையும்படியாகச் சிறிய பெரிய திருமேனியை வளரச் செய்த என் செந்தாமரைக் கண் திருக்குறளனுடைய, பெருமை பொருந்திய சிறந்த மணமுடைய அன்றலர்ந்த திருவடிகளிலே புகுதலும் பாவியேனாகிய எனக்குப் பொருந்துமோ?' என்கின்றார். சிறுமா மனிசர்" என்றவிடத்து பட்டர் அருளிய இதிகாசம் : பட்டர் சிறுவனாக இருந்தபொழுது ஒரு நாள் அவர் தந்தை கூரத்தாழ்வான் திருவாய்மொழி அநுசந்திக் கும்போது இப் பாசுரத்தில் வரும் சிறுமாமணிசராய்' 4. திருவாய், 8.10.3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/508&oldid=921333" இலிருந்து மீள்விக்கப்பட்டது