பக்கம்:வைணவ உரைவளம்.pdf/511

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488 வைணவ உரைவளம் நங்கைமார் அவ்வளவு நெல்லையும் குத்தித் ததியாரா தானை செய்து விட்டார். மறுநாள் கணவர் வந்து சேர்ந்து தானியம் ஒன்றுமில்லாமையைக் கண்டு செய்தி கேட்க, நங்கையார் பரமபதத்தில் விளைவதாக வித்தினேன்' என்றாராம். இப்படிப்பட்ட குடும்பவாழ்க்கை ஆழ்வாருடைய மங்களா சாசன பலத்தினால் அமைந்த தென்று கொள்ளக் கடவது. ஒன்பதாம் பத்து 227 கொண்ட பெண்டிர்'(அவதாரிகை):நெடுமாற்கடிமை" (8. 10) என்ற திருவாய் மொழியில் எம்பெருமான் அடியார் களையே உபாய உபேயங்களான எல்லாமுமாகப் பற்பு யிருக்கையாகிற தம்முடைய சிறந்த விருப்பத்தை வெளி யிட்டார் ஆழ்வார். இத்திருவாய் மொழியில் அவ்வடியார் கள் திருவுள்ளம் உகக்கும்படியான பொருளையே அருளிச் செய்கின்றார். பாகவதர்களே எல்லா உறவும் என்றது முன் திருவாய்மொழி: பகவானே எல்லா உறவும் என் கின்றது. இத்திருவாய்மொழி. இவை ஒன்றோடொன்று முரண்பட்டவை என்று கருதுதல் வேண்டா, பகவத் பக்தி யின் எல்லை நிலமாக பாகவத பக்தியும், பாகவத பக்தி யின் எல்லை நிலமாக பகவத் பக்தியும் கொள்ளத்தக்கது. உலகில் நாம் ஒருவரிடம் வைக்கும் அன்பு அந்த ஒருவர் அளவிலே முடிந்து நிற்காமல் அவருடைய சம்பந்தி சம்பந்தி களிடத்தும் பெருகிச் செல்வது போல, பகவான் பக்கலிலே வைக்கும் அன்பு அவன் அளவிலே நில்லாது அவனுடைய சம்பந்தம் சம்பந்தம் பெற்ற பாகவதர்களிடத்தும் வளர்ந்து செல்லும். அப்படியே பாகவதர்களிடத்தே வைக்கும் 1. திருவாய் 9. l,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/511&oldid=921337" இலிருந்து மீள்விக்கப்பட்டது