பக்கம்:வைணவ உரைவளம்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 489 அன்பும் அவர்களோடு சம்பந்தம் பெற்றவன் என்கிற காரணத்தனாலேயே பகவானிடத்திலும் பெருகும். முன் திருவாய்மொழியில் பாகவதர்கட்கு அடிமைப் பட்டிருத்தலை எல்லையாகவுடைய, தனக்கு மேல் ஒன்றில் லாததான பேற்றினை, யாதொருதடையும் இல்லாதபடி அவன் காட்டிக் கொடுக்க, மிக்க பிரீதியோடே, காட்டிக் கொடுத்த அந்தப்பேருப காரத்தைக் கூறிக்கொண்டு சயமே அடிமை தலைநின்றார் (8. 10: 2 ) என்றும், கோதில் அடியார் (8. 10:9) என்றும், நீக்கமில்லா அடியார்" (8. 10: 10) என்றும், பாகவதரை விரும்பினராய் நின்றார். இந்தப் பொருளை அதுவதித்து அதற்கு ஆப்த சம்வாதம் காட்டுகின்றார் ஈட்டாசிரியர். ஆப்பான் திருவழுந்துர் அரையர், தாம் ஆசிரியராக அடைந்ததும், திருவாய் மொழி கேட்டதும் ஆழ்வானோ டேயன்றோ? சயமே அடிமை தலைநின்றார்" என்றது பூரீ பரதாழ்வான் போல்வாரை: நீக்கம் இல்லா அடியார்’ என்பது இளைய பெருமாள் போல்வாரை; கோதில் அடியார்’ என்றது சத்துருக்காழ்வான் போல்வாரைக் காணும் என்று ஆழ்வான் பணித்தாராகப் பணிப்பர். 228 பொருள்கை உண்டாய்ச் செல்லக் காணில் போற்றியென் றேற்றெழுவர்; இருள்கொள் துன்பத் தின்மை காணில் என்னே என் பாருமில்லை; மருள்கொள் செய்கை அசுரர் மங்க வடமது ரைப்பிறந்தாற்கு அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டிர் அரனே2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/512&oldid=921338" இலிருந்து மீள்விக்கப்பட்டது