பக்கம்:வைணவ உரைவளம்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 491 229 வாழ்தல் கண்டீர் குணமி தந்தோ! மாயவன் அடி பரவி போழ்து போக உள்ள கிற்கும் புன்மை இலாதவர்க்கு வாழ்து ணையா வடம துரைப்பி றந்தவன் வண்புகழே வீழ்து ணையாய்ப் போமிதனில் யாதும் இல்லை மிக்கதே " 1 மாயவன்-சர்வேசுவரன்; அடி-திருவடி; பரவி. துதித்து; போழ்து போக-காலம் கழிக்க; உள்ளகிற்கும்-நினைக்க வல்லவர்களான; புன்மை இவாதவர்க்கு-உத்தமர்கட்கு; வாழ் துணை ஆ.வாழ்வதற்குத் துணையாக;. வண் புகழ் - திருக்குணங்கள்; வீழ்துணையா - ஆசைப்படும் துணையாக; இதனில்.இந்த வாழ்வைக் காட்டிலும்; மிக்கது.மேம்பட்டது) எல்லாவகையிலும் உறவினனான திருமாலைச் சேர் மின் என்று பேசும் திருவாய்மொழியில் இஃது ஒருபாசுரம். இதில் ஆழ்வார், (எம்பெருமானுடைய கல்யாண குணங் களையே கூறிக்கொண்டு) வாழ்தலாகிய இஃது அன்றோ குணமாவது; ஐயோ! மாயவனாகிய இறைவனுடைய திருவடிகளைத் துதித்துக் காலத்தைக் கழிக்க நினைக்கக் கூடியவர்களான பெரியோர்களுடைய வாழ்ச்சிக்குத் துணையாவதற்காக வடமதுரையிலே வந்து திருவவதரித்த வனுடைய வளவிய புகழையே ஆசைப்படும் துணையாகக் கொண்டு வாழ்வதே மேலான வாழ்வாம்; இவ்வாழ்வினைக் காட்டிலும் மேம்பட்ட வாழ்வுயாது ஒன்றும் இல்லை' என்கின்றார். 3. திருவாய். 9, 1. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/514&oldid=921340" இலிருந்து மீள்விக்கப்பட்டது