பக்கம்:வைணவ உரைவளம்.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 வைணவ உரைவளம் ஆழ்வார், திருப்புளிங்குடியிலே திருக்கண் வளர்ந்தும், வரகுண மங்கையிலே வீற்றிருந்தும், வைகுண்டத்திலே நின்றருளியும், தெளிந்திருக்கின்ற என் மனத்தின் கண் பிரியாமல் இருந்தும் என்னை ஆள்கின்றவனே! எனக்குத் திருவருள் புரிந்து, குளிர்ந்த உன் கல்யாண குணத்தை மூன்று உலகங்களும் ஒரு சேர ஆச்சரியப்படும்படியாகவும், நாங்களும் கூத்தாடி நின்று ஆனந்தத்தாலே ஆரவாரிக்கும் படியாகவும், தெளிந்த தண்ணிரை முகந்துள்ள காள மேகத் திலே பவளக் கொடி படர்ந்தாற் போன்று கனிந்த திருவா யானது சிவந்து தோன்றும்படி நாங்கள் காண நீ வரவேண் டும்' என்கின்றார். தெளிந்த என் சிங்தை அகம் கழியாதே : தெளிந்த” என்றதற்கு எத்துணைத் துக்கங்கள் வந்தாலும் கலங்காத என்று பொருள் அருளத் திருவுள்ளம்பற்றி அதற்கு ஐதிகம் காட்டுகின்றார். பட்டர் திருநாராயண புரத்தில் வெறுப் பிலே தேவர் சுவாதந்திரியம் எல்லாம் காட்டினாலும் பின்னையும் பண் ணின நம்பிக்கை பில் குலைத்தல் இன்றிக்கே இருக்கும்படி எலும்பு உரமுடைய எம்பெருமா னார்போல் வார் பக்கல் செய்யுமதனை, எலி எலும்பனான அடியேன் பக்கலிலும் செய்வதோ?’ என்றாராம்.

  • நீ காண வாராய் ! என் எதிரே உன் அழகு காண வர வேண்டும். அவன் கூத்து இருக்கிறபடி அவன் மாறி மாறி இடும் அடி, வல்லார் ஆடினாற் போலே காணும் இருப்பது, அவன் நடத்தல் கூத்து என்பதற்குச் சம்வாதம் காட்டு கின்றார்: பிள்ளை அழகிய மணவாள அரையரை பெருமாள் (திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன்) அருளப் பாடிட்டு, நாம் இங்கனம் தடக்கிறோம்; அதற்கு ஈடாக

8. என்றது; எம்பெருமான் திருமேனிக்கும் அழிவு வந்து பிள்ளை திருநறையூர் அரையரும் திருநாட் டுக்கு எழுந்தருளினதால் வந்த துக்கத்தைக் குறித்தபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/519&oldid=921345" இலிருந்து மீள்விக்கப்பட்டது