பக்கம்:வைணவ உரைவளம்.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 497 நீ ஆடிக்காண்!' என்ன, அதற்கு அரையர், தம் பிரானே! அந்நடைக்கு ஈடாக என்னால் ஆடப்போமோ? கானசும் படி உலாவிஉலாவி என்கிறப்படியே, தேவருடைய குழ லோசையைக் கேட்டவாறே, பாடல் தவிர்ந்தார்கள்! தேவர் இயல்பாகவே நடக்கிற நடைக்குப் பயிற்சியின் பலத்தால் உண்டான தங்கள் ஆடல் தவிர்ந்தார்கள்: குரக்குக் கைகொடு கூழ் துறவி அடியேன் தேவர் திரு முன்னே ஆடவல்லேனோ?' என்றாராம். 2ー2 எங்கள் கண்முகப்பே உலகர்கள் எல்லாம் இணையடி தொழுதெழுந் திறைஞ்சி தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால் தலைத்தலைச் சிறந்துபூ சிப்ப திங்கள் சேர் மாடத் திருப்புளிங் குடியாய்! திருவைகுக் தத்துள்ளாய்! தேவா! இங்ங்ன்மா ஞாலத் திதனுளும் ஒருநாள் இருந்திடாய் வீற்றுஇடம் கொண்டே." (எங்கள் கண்முகப்பே-எங்கள் கண் முன்பே; அடியிணை-திருவடிஇணை; தொழுது எழுது இறைஞ்சி - தொழுவதும் எழுதுவதுமா யிருந்து வணங்கி, அன்பு ஆர-பக்தி வளர: தமது சொல் வலத்தால்-தாம்தாம் சொல் லும் அளவில்; தலைத்தலை சிறந்து பூசிப்பஒருவருக்கொருவர் மேல் விழுந்து தோத் திரங்களைப் பண்ணும்படி; மாஞாலம் 9. பெரி வாழ்.திரு. 3.614 10. குரக்கு - குரக்குவாதம், குரக்குவலித்த கை என்க. 11. திருவாய். 9.2:8 வை.-32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/520&oldid=921347" இலிருந்து மீள்விக்கப்பட்டது