பக்கம்:வைணவ உரைவளம்.pdf/526

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 503 235 அடியா னிவனென் னெக்கா ரருள்செய்யும் நெடியானை, கிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின் கொடியனை, குன்றாமல் உலகம் அளந்த அடியானை, அடைந்தடி யேயுய்ந்த வாறே122 (அடியான்-அடிமைப்பட்டவன்; ஆர் அருள்பேரருள்; நெடியான்-சர்வேசுவரன்; புள்கருடன்; கொடியானை-கொடியாக உடைய வணை; குன்றாமல் - ஒன்றுவிடாமல்; அடியான்-திருவடியை உடையவன்; எம்பெருமானைக் காண விரும்பி அழைத்து, தாம் விரும்பிய வண்ணமே கண்டு மகிழ்தலைக் கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், இந்தச் சடகோபன் அடியவன் என்று எனக்குப் பேரருளைச் செய்த நெடியவனும், நிறைந்த புகழினையும் அழகிய சிறகுகளையு முடைய கருடப்பறவையினைக் கொடியிலே உடையவ னும், ஒரு பொருளும் தவறாதபடி உலகத்தையெல்லாம் அளந்த திருவடியை யுடையவனுமான எம்பெருமானை அடைந்து அடியேன் வாழ்ந்தபடி என்னே' என்கின்றார். "அடியான் இவன் என்று : உண்மையில் தான் அடியவன் அல்லன் என்பதும், அடிய வனென்று அவன் ஆரோபித்துக் கொண்டானென்பதும் தெரிவிக்கப் பட்டதா கின்றது "ஆழ்வார் பக்கலிலே ஏன் அத்தனை யருள் செய்தாய்?" என்று யாரேனும் கேட்டால் அவர் எனக்கு அடியவராயிருந்தபடியினாலே' என்று அவர்களுக்கு ஒரு மறுமாற்றம் சொல்வதற்காக அடியான் இவன் என்று ஏறிட்டுக் கொண்டு அருள் செய்தான் என்கின்றார், 22. திருவாய் 3.310

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/526&oldid=921353" இலிருந்து மீள்விக்கப்பட்டது