பக்கம்:வைணவ உரைவளம்.pdf/529

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 வைணவ உரைவளம் ! அறுக்கும்-போக்கக் கடவதாய்; ஆகத்துதங்கள் உள்ளத்திலே; நிறுத்தும் மனத்துநிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்திலே; ஒன்றிய-ஒருமைப்பாடு டைய; சிந்தையினார்க்கு-மனோரதத்தை யுடைய பக்தர்க்கு; வெறி-நறுமணம் மிக்கு: குறுக்கும்-கிட்டும்; கொடியேற்கு-கொடி யேனான எனக்கு) மகள் பாசுரம், தூதர் மீளும் அளவும் தனிமை பொறாத தலைவி தலைவன் நகரான திருநாவாய் செல்ல நினைத் தலைக் கூறும் திருவாய் மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார் நாயகி, அந்தச் சர்வேசுவரனைத் தங்கள் உள்ளத்திலே நிலை நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற கருத்திலே ஒருமைப்பாடுடைய எண்ணத்தை யுடைய அடியார்களுக்கு வினை என்று பெயர் பெற்றவை கள் அனைத்தையும் போக்குவான்; அத்தகையோன் எழுந்தருளியிருக்கின்ற மணம் பொருந்திய குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருநாவாய் என்னும் திவ்விய தேசத்தைக் கொடியேனாகிய எனக்கு அணுகும் வகை உண்டோ?' என்கின்றார். குறுக்கும் வகை உண்டுகொலோ 1 குறுகச் செய்யும் வகை ஏதோ? அன்றிக்கே, குறுகும் விரகு ஏதோ ? என்னுதல். குறுக்கு" என்பது மலையாள நாட்டு வழக்கு, குறுகும்-அணுகும்; குறுகும்’ என்பதற்கு மலையாள மொழியில் அண் ைமயில் உள்ளது என்பது பொருள். மலையாள நாட்டு வழக்கு என்பதற்கு ஐதிகம் அருளிச் செய்கின்றார் ஈட்டாசிரியர், ஒரு சமயம் எம்பெருமானார் மலைநாட்டுத் திருப்பதி யாத்திரையாகச் சென்றிருந்தார். திருநாவாய்க்கு அளித்தாகச் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரிலே வந்து கொண்டிருந்த மலையாளர்களை நோக்கித் திருநாவாய் எவ்வளவு தூரமுண்டு?’ என்று வினவினார். அவர்கள் குறுக்கும் என்றார்கள்: அண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/529&oldid=921356" இலிருந்து மீள்விக்கப்பட்டது