பக்கம்:வைணவ உரைவளம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வைணவ உரைவளம் சேஷ்டைகள். சிறு பிள்ளைகள் பூச்சி காட்டி விளையாடு வதைப்போல் கண்ணபிரானும் தான் மானுடனாகப் பிறந்ததற்கேற்பப் பூச்சி காட்டி விளையாடியதை அக் காலத்திலுள்ள இடைப் பெண்கள் கண்டு அநுபவித்து உகந்தாப் போலே, பெரியாழ்வாரும் சிறந்த சிந்தனை யாலே அச்சேஷ்டிதத்தை நேர்க்காட்சியாகக் காண்பது போல் கண்டு அநுபவித்து இனியராவதைக் காட்டும் திரு, மொழி இது. "அத்துாதன்... அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்' என்ற ஈற்றடியைக் குறித்து ஒர் ஐதிகம். இப்பாசுரத்தை நம் பெருமாள் சந்நிதியில் உடையவர் குழுவில் உய்ந்த பிள்ளை என்ற பெயர் கொண்ட அரையர் ஒருவர் அபிநயத்துக் காட்டும்போது அத்துதன்' என்னும்போது கண்ண பிரானையும், அப்பூச்சி' என்னும்போது கண் இமையை மடக்கிக்கொண்டு வருவதையும் காட்டி அபிநயித்தார். அப்போது உடையவரின் பின்புறம் எழுந்தருளியிருந்த எம்பார், தம் திருக்கைகளைத் திருத்தாள்களோடு சேர்த்துக் காட்ட, அரையரும் தாம் முன் அபிநயித்ததை விட்டு எம்பார் காட்டியதைப்போலவே எம்பெருமான் திருத்தோள்களில் சங்கு சக்கரங்கள் தரித்துக் கொண் டிருப்பதை அபிநயித்துக் காட்டினார். இதனைக் கண்ட உடையவர் மிகவும் மனமுவந்து, கோவிந்தப் பெருமாள் இருந்திரோ?' என்றாராம். இதனால் ஏற்படுவதாவதுதூதனாய்த் தன் செளலப்பியத்தை வெளியிட்டு நம்மிலே ஒருவன்' என்று இவ்வுலகத்தவர் கொள்ளும்படி இருப்பவன் அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் ஈசுவரத்துவ சின்னங் களைக் காட்டுகின்றான் என்பது; இஃது ஈற்றடிக்கு, உள்ளுறைப் பொருள் (ஸ்வாபதேசம்). 3. இவர் உடையவரின் ஒன்றுவிட்ட தம்பி, கோவிந்தப். பெருமாள் என்ற திருநாமத்தாலும் வழங்கப்பெறுபவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/53&oldid=921357" இலிருந்து மீள்விக்கப்பட்டது