பக்கம்:வைணவ உரைவளம்.pdf/535

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 t 2 வைணவ உரைவளம் 241 கெடும்.இட ராய எல்லாம் கேசவா என்ன; நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்; விடமுடை அரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும் தடம்உடை வயல னந்த புரநகர் புகுதும் இன்றே" கெடும்- தொலைந்துபோம்; இடர்- துன்பம்: நாளும்- தினந்தோறும்; கொடுவினைகொடுமைகள்: செய்யும்- செய்யநிற்கும்: நிற்கும்; கூற்றின் தமர்-யமபடர்கள்; குறுக நில்லார்- அணுகமாட்டார்கள்; சுரும்புவண்டுகள்; அலற்றும்-ஆரவாரிக்கும் தடம் தடாகங்கள் புகு தும் புகுவோம்) திருவனந்தபுரத்தைச் சேர்ந்தால் பரமபதத்திற் போலத் தொண்டு செய்யலாம் என்று கூறுவதாக அமைந்த திருவாய்மொழியில் இஃது ஒருபாசுரம். இதில் ஆழ்வார், கேசவா! என்று ஒருமுறை சொல்ல எல்லாத் துன்பங் களும் அழியும்; எப்பொழுதும் கொடிய காரியங்களையே செய்கின்ற யமதூதர்களும் அணுகமாட்டார்கள்; ஆதலால் நஞ்சு பொருந்திய ஆதிசேட சயனத்திலே அறிதுயில் செய் கின்ற எம்பெருமானுடைய, வண்டுகள் ஒலிக்கின்ற தடா கங்களையுடைய வயல்கள் சூழ்ந்த திருவனந்தபுரம் என்னும் நகரத்தை இன்றே அடைவோம்' என்கின்றார். யமனுடைய துன்பத்திற்கு அஞ்சவேண்டா என்னு மதற்கு ஐதிகம் காட்டுகின்றார் ஈட்டாசிரியர். ஒரு திரு 6. திருவாய் 10.1111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/535&oldid=921364" இலிருந்து மீள்விக்கப்பட்டது