பக்கம்:வைணவ உரைவளம்.pdf/536

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 5 : 3 வேட்டையிலே, பட்டர் திருவூற்றங்கரையிலே பேரோலக்க மாக இருக்க, மாலைப் பொழுது ஆயிற்று" என்று சிலர் விண்ணப்பம் செய்ய, நாம் பெருமாள் அழகிலே துவக் குண்டு இன்று ஒருநாளும் செய்ய வேண்டிய காரியத்திலே சிறிது தாழநின்றோம் என்றால் இது குற்றமாக யமன் கேட்கவோ? ஓர் அரசன் இருந்து நாட்டுக்கணக்கு கொடு வரா நின்றால் அரசனுக்கு அந்தரங்கனாய் இருப்பான் ஒருவன் பெயரை வாசித்தால், ஒம் காண்! அது கிடக்க: மேலே செல்' என்றால் பின்னை ஒருநாளும் அப்பெயரை எடுத்து வாசிக்கப்பெறான் காண்; இந்த விஷயத்திலே * உனக்காகித் தொண்டுபட்ட, நல்லேனை வினைகள் நலி யாமை நம்பு நம்பீ' என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்காகத் தொண்டு பட்டுப் போதுபோக்குமவர்களை வினைகள் நலியுமோ?" என்று அருளிச் செய்தாராம், 242 இன்றுவோய்ப் புகுதி ராகில் எழுமையும் ஏதம் சாரா குன்றுகேர் மாட மாடே குளுக்துசோ செருக்திபுன்னை மன்றலர் பொழி லனந்த புரநகர் மாயன் நாமம் ஒன்றுமோர் ஆயிர மாய் உள்ளுவார்க் கும்ப ரூரே" 7. பெரி. திரு. 6:3:9 8. திருவாய். 10. 2; 2 வை.-33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/536&oldid=921365" இலிருந்து மீள்விக்கப்பட்டது