பக்கம்:வைணவ உரைவளம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 27 3. சீமா லிகன்.அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் சாமா றவனைt யெண்ணிச் சக்கரத் தால்தலை கொண்டாய் ஆமா றறியும் பிரானே! அணியரங் கத்தே கிடந்தாய், ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப் பூச்சூட்ட வாராய்' (தோழமை-நட்பு; சாம் ஆறு-செத்துப் போகும் வழி; எண்ணி-ஆலோசித்து; தலைகொண் டாய்-தலையையும் அறுத்தாய்; ஆம் ஆறுநடக்க வேண்டியவற்றை; அணி-அழகிய: என்னை ஏமாற்றம் தவிர்த்தாய்-எனக்குத் துன்பத்தைப் போக்கினவனே.) இது பெரியாழ்வார் திருமொழியில் உள்ள ஒரு பாசுரம். ஆழ்வார் யசோதை நிலையிலிருந்துகொண்டு அவள் சொல்லியபடியே நான் பல்வேறு மலர்களையும் வைத் துள்ளேன்; அவை செவ்வியழிவதற்கு முன்னே நீ அவற்றைச் சூட்டிக்கொள்ள வரவேண்டும்' என்று அக் கண்ணபிரானை அழைத்து இனியராகும் திருமொழியில் இருவாட்சிப்பூ சூட்டிக் கொள்ள வருமாறு அழைக்கின்றார் இப் பாசுரத்தில். சீமாலிகன் வரலாறு : மாலிகன் என்பான் கண்ண பிரானின் உயிர்த் தோழன். மேன்மைப் பொருளைத் தரும் கபூர் என்ற சொல் 'சீ' எனத் திரிந்து வந்து சீமாலிகன்" 4. பெரியாழ் திரு. 2.7:3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/54&oldid=921369" இலிருந்து மீள்விக்கப்பட்டது