பக்கம்:வைணவ உரைவளம்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 517 'இப்பிறப்பு அறுக்கும் : கண்டதே அன்றோ இதனு டைய இழையீடு: கவிழ்ந்துபார்க்க அமையுமே இதனுடைய டைய அகவாயை; தன்னடைவே வைராக்கியம் பிறக்குமே. இப்படிக் கண்கூடாகக் கண்டிருக்கச் செய்தேயும் வைராக் கியம் பிற வாதிருக்கிறதேயன்றோ வாசனையின் கனம்? இங்க ஒரு சம்வாதம் ஈட்டில் காட்டப்பெற்றுள்ளது. ஒரு செட்டியை இவன் தமிழில் சிறந்த புலமை படைத்தவன்" என்று பட்டருக்குக் காட்டினார்கள் சில சீடர்கள், பட்டர் அவனைப் பார்த்து உனக்கு யாதேனும் விருப்பம் இருப் பின் கேட்கலாகாதோ? என்று கூற, அதற்கு அவன், சிலர் *காண்கின்ற தேசத்துக்கு அவ்வருகு ஆன்மாவும் இல்லை, புண்ணிய பாவங்களும் இல்லை, ஈசுவரனும் இல்லை" என்கின்றனர். சிலர், இச் சரீரம்தான் நிலையற்றது" என்று இதனுடைய தாழ்வினைக் கண்டு அவ்வருகே நிலைத்திருக்குமது ஒன்றனைப் பற்றவேண்டும்" என்கின் றனர்; விஷயம் ஒன்றாக இருக்க, வேறுபட்ட இவ்விரண்டு கொள்கைகளும் நடக்கிறபடி எங்ங்னே?’ என்று கேட்க, என்னுடைய மாயையானது ஒருவராலும் தாண்ட முடியாதது' என்றும், என்னையே பற்றினவர்கள் அம் மாயையினைத் தாண்டுகின்றனர்' என்றும் கீதை உரைக் கின்றபடியே, நல்லவர்கள் இதனுடைய தாழ்வினைக்கண்டு இதனைக் கழித்துக் கோடற்கும், மந்றையோர்கள் இதிலே இனிமை உண்டு என்று நினைத்துக் கேடுறுதற்கும் உடலாம் படி காமங்கட்குத் தகுதியாக இதனை அறுதியிட்டுக் காணும் ஈசுவரன் பண்ணிற்று' என்று அருளிச் செய்தார். 244 கடுவினை களைய லாகும் காமனைப் பயந்த காளை இடவகை கொண்ட தென்பர் எழிலணி அனந்த புரம் 13. கீதை. 7:14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/540&oldid=921370" இலிருந்து மீள்விக்கப்பட்டது