பக்கம்:வைணவ உரைவளம்.pdf/542

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 519 தருளினார். அந்தச் சமயம் திருவத்யயநோத்சவம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அரையர் கோட்டியில் சேர்ந்த அவர் சேவிக்கும் திருப் பாசுரங்களில் ஆழ்ந்து ஈடுபட்டிருந் தார். அரையர் கடுவினை களைய லாகும்" என்கின்ற இந்தப் பாசுர அளவிலே வரும்போது, எழிலனி அனந்தபுரம் படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண கடமினோ நமர்கள் உள்ளீர் நாமும் உமக்கறியச் சொன்னோம்: என்ற அடிகளைச் சேவிக்கும்போது, ஆளவந்தார் திருமுகத் தைப் பார்த்து ஊன்றி உறுத்திச் சேவிக்க, ஆளவந்தாரும் இதைக் கேட்டு ஆழ்வாருடைய தமர்களிலே நாம் சேர வேண்டில் திருவனந்தபுரம் சென்று சேவித்து வரப் பிராப் தம்’ என்று சொல்லிக்கொண்டே அப்போதே ரீபாதத்தை உடையாரைக் கூட்டிக்கொண்டு நம்பெருமாளிடம் விடை பெற்றுப் பயணமாகித் திருவனந்தபுரத்திற் கெழுந்தருளி அனந்த பத்மநாபனை மங்களாசாசனம் செய்து வாழ்ந்து வந்தார். இந் நிலையில் குருகைக் காவலப்பன் எழுதித் தந்த சிறு முறியைப் பார்க்க நேர்ந்து அந்நாளே அவர் குறிப்பிட்ட நாளாக இருந்தது. உடனே துணுக்குற்று அலமந்து ஐயோ, நாம் நினைத்தவுடன் எங்கும் சென்று சேரும் ஆற்றலுடைய பெரிய திருவடியும் அல்லோம்; சிறிய திருவடியும் அல்லோம். அங்குச் சென்று சேர்வதற்கு ஒரு புட்பக விமானம் பெற்றிலோமே" என்று சோகித்து எழுந் தருளியிருந்தார். இங்கே ஈட்டு ரீசூக்தி : திருவத்யயநம் பாடாநிற்க இத்தைக் கேட்டருளி ஆளவந்தார் நமக்கு ஆழ்வாரோடே ஒரு சம்பந்தமுண்டாக வேணும்' என்று அப்போதே பூர் பாதத்தை உடையாரைக் கூட்டிக் கொண்டு எழுந்தருளி னார்' (அனந்தபுரத்துக்கு).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/542&oldid=921372" இலிருந்து மீள்விக்கப்பட்டது