பக்கம்:வைணவ உரைவளம்.pdf/546

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 523 முள் பாய்ந்தால் ஆயன் தலைசாண் சிக் கொள்வது' என்பாராம். சரீரத்தில் ஒன்று வந்தால் இன்ப துன்பங்கள் அநுபவிப்பது ஆன்மா அன்றோ? 247 அருள்பெறுவார் அடியார்தம் அடியனேற்கு, ஆழியான் அருள்தருவான் அமைகின்றான் அதுகமது விதிவகையே இருள்தருமா ஞாலத்துள் இனிப்பிறவி யான்வேண்டேன் மருளொழிநீ மடநெஞ்சே! வாட்டாற்றான் அடிவணங்கே.2' |அடியார்-பாகவதர்கள்; ஆழியான்-சக்கரப் படையையுடைய எம்பெருமான்; இருள்அறிவின்மை; ஞாலம்-உலகம்; மடநெஞ்சேசபலமான மனமே, மருள்-மயக் கம்1 இது வாட்டாற்றுமீது மங்களாசாசனம் செய்யப் பெற்ற நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், தனது திருவருளைப் பெறுதற்கு உரியவ ரான அடியவர்களுக்கு அடிமைப்பட்டிருக்கின்ற எனக்கு, திருவாழியைத் தரித்த எம்பெருமான் திருவருளைச் செய் வதற்கு சமைந்திருக்கின்றான்; அங்ங்ணம் அவன் திருவரு ளைச் செய்வதும் நாம் விதித்த கட்டளையின் படியேயாம் ; ஆதலால் அறிவின்மையை உண்டு பண்ணுகின்ற பெரிய இந்த உலகத்தில் இனிப் பிறவியை நான் விரும்பேன்; அறியாமை பொருந்திய மனமே! நீ மயக்கம் நீங்கு: திருவாட்டாற்றில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமா னுடைய திருவடிகளை வணங்கு' என்கின்றார். 21. திருவாய், 10.6;!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/546&oldid=921376" இலிருந்து மீள்விக்கப்பட்டது