பக்கம்:வைணவ உரைவளம்.pdf/547

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 வைணவ உரைவளம் இங்கு ஓர் ஐதிகம் : இராமாநுசரின் சீடரும் பரிசாரகரு மாகிய கிடாம்பி ஆச்சான் (மடைப்பள்ளி ஆச்சான்) பட்ட ரிடத்தில் மிக்க அன்பினை வைத்திருப்பவர். கிடாம்பி ஆச்சானுடைய சீடராகிய இளையாழ்வான் தன் ஆசாரிய னாகிய ஆச்சானை நோக்கி பட்டரை அடைந்த அடியவர் கள் எல்லோரையும் விட நீர் தாழ நின்று பழகுவதேன்?" என்று கேட்க, அதற்கு ஆச்சான், "நீ அன்று கண்டிலை காண்; எம்பெருமானார், பட்டர் கையிலே புத்தகத்தைக் கொடுத்துத் திருமுன்பே ஒரு சுலோகத்தை விண்ணப்பம் செய்வித்துத் திருப் பிரம்புக்குப் புறம்பாகக் கொண்டு புறப்பட்டுச் சுற்றும் பார்த்தருளி, நம்முடையோர் அடங்க லும் நம்மை நினைத்திருக்குமாறு போலே இவனை நினைத் திருங்கோள்' என்று அருளிச் செய்தார். நமது விதி வகையே என்பதற்கு இஃது ஐதிகம். 248 வானேற வழிதந்த வாட்டாற்றான் பணிவகையே நானேறப் பெறுகின்றேன் நரகத்தை நகுகெஞ்சே தேனேறி மலர்த்துளவம் திகழ்பாதன், செழும்பறவை தானே றித் திரிவான தாளினையென் தலைமேலே 22 வான்-பரமபதம் : வழி-அர்ச்சிராதி நெறி; பணி வகை-திருவுள்ளமான படி; தேன் ஏறு-தேன் பொருந்திய, பறவை-பெரிய திருவடி: TSAASAASAAAS 22. திருவாய், 10,6:5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/547&oldid=921377" இலிருந்து மீள்விக்கப்பட்டது