பக்கம்:வைணவ உரைவளம்.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 வைணவ உரைவளம் 249 செஞ்சொற் கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின் திருமா லிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து, என் கெஞ்சும் உயிரும் உள்கலந்து கின்றார் அறியா வண்ணம், என் நெஞ்சும் உயிரும் அவையுண்டு தானே யாகி நிறைந்தானே23 [உயிர்காத்து-பாது காத்துக் கொண்டு; ஆள் செய்யுமின்-அடிமை செய்யுங்கள்; உயிர்ஆன்மா: நின்றார்-அருகே நின்ற பிராட்டி யார்) ஆழ்வார் தமது மேனியின்மேல் எம்பெருமான் வைத்துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுவதாய் அமைந்துள்ள திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், செவ்விய சொற்களையுடைய புலவர்களே! உங்களைப் பாதுகாத்துக் கொண்டு கவிபாடுதலாகிற அடிமையைச் செய்யுங்கோள்; திருமாலிருஞ்சோலை மலை யில் எழுந்தருந்தருளியிருக்கின்ற வஞ்சக் கள்வனும் மாமா யனுமான எம்பெருமான் ஆழ்வாரே! உம்மைக்கொண்டு கவிபாடுவித்துக் கொள்ளப்பாரா நின்றேன் என்றேன் ஒரு மாயம் செய்துவந்து, என் மனத்தினுள்ளும் உயிரினுள்ளும் ஒரு நீராகக் கலந்து, நிற்கின்ற பெரியபிராட்டியார் முதலாயினோரும் அறியாதபடி, என்மனத்தையும் உயிரை யும் அநுபவித்து, என்னைக் காண இடமின்றித் தானேயாகி நிறைந்தவன் ஆனான். ஆதலால். உயிர்காத்து ஆட்செய் மின்' என்கின்றார். 23. திருவாய். 19.7:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/549&oldid=921379" இலிருந்து மீள்விக்கப்பட்டது