பக்கம்:வைணவ உரைவளம்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 வைணவ உரை வளிம் ஆழ்வார் தம் மேனியின் மேல் எம்பெருமான் வைத் துள்ள வாஞ்சையைப் பாராட்டிப் பேசுவதாக அமைந் துள்ள திருவாய்மொழியில் ஒரு பாசுரம். இதில் ஆழ்வார்: "கிட்டக் கடவோம் அல்வோம் என்று இருக்கிற அசுரக் கூட்டங்கள் அழியும் படியாகவும், சிறந்த குணங்களை யுடையரான தேவர்கள் மேன் பையினை அடையும் படி யாகவும்,மற்றை மக்கள் எண்ணாதனவற்றை எண்ணுகின்ற சிறந்த முனிவர். கட்கு இன்பம் மேலும் மேலும் ஓங்கும் படியாகவும், பண்ணோடு கூடிய இசையையுடைய இனிய பாசுரங்களைத் தானேயானாகித் தன்னையே தான்பாடித் தென்னாதெனா என்று ஆளத்திவையா நிற்கும் எம்பெரு மான்திருமாலிருஞ்சோலை மலையிலே உள்ளவன் ஆவான்' என்கின்றார். கண்ணா அசுரர் கலிவு எய்த' என்ற இடத்தில் ஈடு: 'அவ்யபதேஷ்யனுக்கு அநந்தரத்திலவன் ", தமப்பன் செய்ததைக் கேட்டு இவன் என் செய்தானானான்?? என்று சிரித்தான்; ஒருமதிளை வாங்கும் காட்டில் அத்தர் சனம் குலைந்ததோ? திருவாய்மொழியென்றும் இராமா யணம் என்றும் வலியன இரண்டு பிரபந்தங்கள் உண்டா யிருக்க' என்றானாயிற்று! இப்படி உகவாதார் நெஞ்சு உளுக்கும் படியான பிரபந்தமாய்த்து'. திருவாய்மெழி விரோதிகள் அழிவதற்குக் காரணம் என்பதற்கு இது சம்வாதம. இதனை விவரிப்போம் : அவ்யபதேச்யனென்றது கிருமி கண்ட சோழனை. இவன் பதினோராம் நூற்றாண்டில் (கி. பி. 1070-1116) இருந்த முதற்குலோத்துங்கன் என்பர் இவன் தத்துவ ஞானிகளான பெரிய கம்பி, கூரத்தாழ்வான் என்னும் பெரியார்கள் இருவருடைய திருக்கண்கள் 27. அவ்யபதேசயன் எடுத்துப் பேசுவதற்குத் தகாதவன்; நீசன் (கிருமிகண்டன்) 28. அந்தரத்தில்வன்- அவன் மகன் (விக்கிரம சோழன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/551&oldid=921382" இலிருந்து மீள்விக்கப்பட்டது