பக்கம்:வைணவ உரைவளம்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 வைணவ உரை வளம் இப்பாசுரத்திற்கு ஓர் ஐதிகம் : எம்பெருமானார் ஒரு சமயம் உண்டபின் நூறு அடி உலாவ வேண்டும் என்ற சாத்திர விதிப்படி திருவமுது செய்தபிறகு நூறு அடி உலாவ வேண்டுகையாலே அதற்கு உறுப்பாக மடத்திற் தள்ளேயே உலாவி வந்து கொண்டிருந்தார். அப்போது திருமாலிருஞ் சோலை மலை’ என்ற திருவாய்மொழியை அதுசந்தானம் செய்து கொண்டிருக்கையாலே,இப்பாசுரத்தின் மடித்தேன்' என்ற இதற்குச் சேர மேலே போகாமல் திரும்பியருளினார். எம்பார் கதவினை ஒருபுறமாகச் சாய்த்து அதன் புரையாலே அவர்,திரும்புவதைக் கண்டு : திருமாலிருஞ்சோலை மலை’ என்ற திருவாய்மொழி அநுசந்தான மன்றோ திருவுள்ளத் தில் ஒடுகின்றது' என்றாராம். "ஆம், அப்படியே' என்று விடையிறுத்தாராம் எம்பெருமானார். 252 இன்றெைைனப் பொருளாக்கித் தன்னையென் னுள் வைத்தான் அன்றென்னைப் புறம்பாகப் புணர்த்ததென் செய்வான்? குன்றென்னத் திகழ்மாடங்கள் சூழ்திருப் பேரான் ஒன்றெனக் கருன்செய்ய வுணர்த்தலுற் றேனே" என்னை இன்று-அநாதிகாலம் தன்னைப் பெற் றிருந்த என்னை இன்று தன்னை-பரம போக்கியனான தன்னை; என்னுள்-என் நெஞ்சினுள்: அன்று என்னை-அநாதி காலம் நான் கைகழிந்து போம்படி, புறம்போக புணர்த்தது- என்னைத் தள்ளிவைத்தது: குன்று என்ன-குன்றுகள் இவை என்னலாம் 38. திருவாய். 10.8.9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/555&oldid=921386" இலிருந்து மீள்விக்கப்பட்டது