பக்கம்:வைணவ உரைவளம்.pdf/556

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 334 படி; ஒன்று-ஒருவிடை: உணர்த்ததுற்றேனே விண்ணப்பிக்கின்றேன்) காரணம் இன்றியே அருளி மகிழும் எம்பெருமானது திறத்தைப் பேசி மகிழுவதைக் கூறும் திருவாய்மொழியில் ஒருபாசுரம். இதில் ஆழ்வார், ' இன்று என்னைப் பொரு ளாக்கித் தன்னை என் மனத்தின் கண்ணே இருத்தினான்: அன்று ஐம்புல இன்பங்களிலே கலையும்படி செய்து பரா முகம் பண்ணி இருந்தது எதற்காக? மலைகளைப் போன்று விளங்குகின்ற மாடங்கள் சூழ்ந்த திருப்பேர் என்னும் திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமான் தக்கது ஒரு விடையைச் சொல்லவேண்டும் என்று விண்ணப் பிக்கின்றேன்' என்கின்றார். ஒன்று எனக்கு அருள் செய்ய : முன்பு என்னைக் கை விட்டதற்குக் காரணம் சொல்லவுமாம்; இன்று என்னை அங்கீகரித்தற்குக் காரணம் சொல்லவுமாம். ஆழ்வார் எம் பெருமானை நோக்கி இப்படி வினவினாரே? இதற்கு எம் பெருமான் என்ன மறுமொழி கூறினான்?' என்று நஞ்சீயர் பட்டரைக் கேட்டாராம்; அதற்கு பட்டர் அருளிச் செய் தாராம் : அவன் பதில் சொல்லுவதற்கு என்ன இருக் கிறது? இவர் தலையிலே ஒரு பழியை ஏறிட்டு நெடுநாள் இழந்து கிடந்த நாம் என்ன சொல்லுவது?’ என்று வெட்கிக் காலாலே தரையைக் கீறி நிற்பதைத் தவிர வேறுண்டோ? என்று.' 25з எதிரெதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர், கதிரவர் அவரவர் கைக்கிரை காட்டினர், அதிர்குரல் முரசங்கள் அலைகடல்:முழக்கொத்த மதுவிரி துழாய்முடி மாதவன் தயிர்க்கே" 39. திருவாய் 10, 9; 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/556&oldid=921387" இலிருந்து மீள்விக்கப்பட்டது