பக்கம்:வைணவ உரைவளம்.pdf/557

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 வைணவ உரைவளம் (எதிர்எதிர்-போகிறவழிக்கு முன்னே; இமையவர் தேவர்கள்; இருப்பு இடம்-தங்கும் இடம்: வகுத்தனர்- சமைத்தார்கள்; கதிரவர்பன்னிரண்டு ஆதித்தர்கள்: அவரவர்-மாற்று முள்ளவர்களும் ஆதிவாசிக வணங்களெல்லாம் கைநிரை காட்டினர்-கைகாட்டிக் கொண்டே சென்றார்கள்; அதிர்குரல்- அதிருகின்ற முழக்கம் முரசங்கள்.-பேரிகைகள்; முழக்குகர்ச்சனை; ஒத்த-போன்றன; மாதவன் தமர்-பாகவதர்கள்) இது நம்ம்ாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம்; திரு நாட்டுக்குச் செல்வாருக்கு நடைபெறும் உபசாரங்களை ஆழ்வார் தாமே அநுபவித்துப் பேசும் பதிகத்திலுள்ள ஒரு பாசுரம். இதில் சமாதவன் அடியார்கட்கு தேவர்கள் வழி நெடுக இடம் வகுத்தனர்; ஆதித்தர்கள் கைகாட்டிக் கொண்டே சென்றார்கள்; அவர்கள் அடித்த முரசங்களின் ஒலி கடல் முழக்கத்தை ஒத்திருந்தது' என்கின்றார் ஆழ்வார். இவ்விடத்து கம்பிள்ளை ஈட்டில் அற்புதமான ஒரு பூரி சூக்தி உள்ளது. இங்கே வைணவர்களென்பதுவே ஏது வாகப் பங்கு பெறாதே திரியுண்ட வைணவர்களை அங்குள்ளார் எதிர்கொண்டு இருப்பிடங்கள் கொடுக்கிற படி' என்று. அதாவது-திருநாட்டில் இப்படிப்பட்ட சத் காரம் பெறும் ரீ வைணவர்கள் இந்த நாட்டில் இருக்கும் பொழுது இங்குள்ளவர்களால் ஒரு சத்காரமும் பெறாத தோடு திரஸ்காரமும் பெறுகிறார்களே என்று திருவுள்ளம் நொந்து அருளிச் செய்கின்றபடி. இதற்காக ஓர் இதிகாசமும் அருளிச் செய்கின்றார். மிளகாழ்வான் என்கின்ற ஒரு பூர் வைணவர். அரகன் வித்துவான்களுக்கெல்லாம் கிராம பூமிகள் வழங்குகின்றானென்றுகேள்வியுற்றுத் தாமும் வித்து வானாகையாலே தமக்கு அவை கிடைக்கக் கூடுமென்று எண்ணி அவ்வரசனிடம் சென்றார். அந்த அரசன் வீர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/557&oldid=921388" இலிருந்து மீள்விக்கப்பட்டது