பக்கம்:வைணவ உரைவளம்.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாய்மொழி 535 சைவனாகையாலே இவருக்கு ஒன்றும் தரமாட்டேன் என்றான். ஏன் எனக்குத் தரமாட்டேன் என்கின்றாய்? எனக்குத் தர்க்கம் தெரியாதா? வியாகரணம் தெரியாதா? மீமாம்ஸை தெரியாதா? எந்தச் சாத்திரத்தில் வேண்டு மானாலும் தேர்வு வைத்துத் தேறலாமே என்றார். அதற்கு அரசன் "ஒய்! உமக்குப் புலமையில் குறை யொன்றும் நினைத்திலேன். நீர் பெரும் புலவர் என்பதை அறிவேன். ஆனால், நீர் வைஷ்ணவனாகையாலே தர மாட்டேன்' என்றான். அது கேட்டு மிளகாழ்வான் "உண்மையில் நமக்கு வைஷ்ணத்துவம் இல்லையாகிலும் இவனுடைய எண்ணத்திலாவது நமக்கு வைஷ்ணவத்துவம் உண்டாகப் பெற்றதே!' என்று ஆனந்தக் கூத்தாடிக் கிராம பூமிகள் பெறுவதால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு மேலாக மன நிறைவு பெற்றானாம். இதனால் சாதாரண மக்கள் வைணவர்கள் என்று திரஸ்கரிப்பதும் நன்றே என்று காட்டினபடி, 254 கோல மலர்ப்பாவைக் கன்பா கியவென் அன்பேயோ! கீல வரை இரண்டு பிறைகள்வி கிமிர்ந்தது ஒப்ப கோல வராகம்ஒன்றாய் கிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்! லேக் கடல்கடைந்தாய் உன்னைப் பெற்றினிப் போக்குவனோ? 40 40. திருவாய்.18, 10 : 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/558&oldid=921389" இலிருந்து மீள்விக்கப்பட்டது