பக்கம்:வைணவ உரைவளம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 29 பெரியோர். பெரியவாச்சான் பிள்ளையும், இத் திருமொழி யின் 6.ஆம் பாசுரத்தின் வியாக்கியானத்தில் இதைத் தெளிவாக அருளிக் செய்துள்ளமை காணத்தக்கது. 4 மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல்வாய் மாண்டானை ஒதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பியெங்கும் போதில் வைத்த தேன்சொரியும் புனலரங்கம் என்பதுவே" (மாதவத்தோன்-சாந்தீபினி; மறிகடல்-அலை எறியா நின்ற கடல்; தக்கணை-தட்சிணை; உருஉருவே-மரணமடைந்த போதுள்ள உருவம் மாறாதபடி: தோதம்வத்திபரிசுத்தமாகத் தோய்த்து உலர்த்தின ஆடை: துறை-படித்துறை, துளும்பி-அலை மோதப் பெற்று; போது-பூ; புனல்-நீர்.1 பெரியாழ்வார் திருவரங்கத்தின்மீது மங்களாசாசனம் செய்த ஒரு திருமொழியின் முதல் பாசுரம். இதில் ஆழ்வார், *கண்ணபிரான் சாந்தீபினி என்னும் அந்தணர்பக்கல் சகல சாத்திரங்களையும் கற்ற பிறகு குருதட்சிணையாகக் கடலில் பல ஆண்டுகட்கு முன்னர் இறந்த மகனை உருமாறாத வண்ணம் கொண்டு வந்து கொடுத்தான். அவன் உறையும். ஊர் திருவரங்கம்' என்கின்றார். 5. GEffiary. திரு. 4.8:1.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/56&oldid=921391" இலிருந்து மீள்விக்கப்பட்டது