பக்கம்:வைணவ உரைவளம்.pdf/573

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 55 1 உடையவர் : எம்பெருமானார் காண்க. உய்ந்த பிள்ளை ; இராமாநுசர் காலத்தில் திருவரங் கதிதில் வாழ்ந்த அரையர்களுள் ஒருவர். இவர் அபிநயித் ததை எம்பார் திருத்திக் காட்ட அதன்படி அபிநயித்துக் காட்டி உடையவரின் உகப்புக்கு ஆளானவர் (பாசுரம் 2 காண்க). எம்பார் : உடையவரின் சிறிய தாயார் மகன். மாதுலனான திருமலை நம்பியால் கோவிந்த பட்டர்’ என்று திருநாமம் சாத்தப்பட்டவர். இளையாழ்வாரும் இவரும் யாதவப்பிரகாசரிடம் வேதாந்தங்களைக் கற்ற வர்கள். இவர் கங்கையில் நீராடும்போது ஒரு சிவலிங்கம் இவர் கையில் வந்து சேர்ந்தது, அதுவே ஏதுவாக இவருக்கு *உள்ளங்கை கொணர்ந்த நாயனார் என்று பெயரிட்டுக் காளத்தியில் சிவ வழிபாடு செய்து வந்தார். பெரிய திருமலை நம்பி இவரைத் திருத்திப் பணி கொள்ளக் காளத்தியில் பூiபாத முதலிகட்கு திண்ணன் வீடு'(திருவாய். 2. 2). காலட் சேபம் சாதித்து வந்தார். அப்போது எம்பெருமானுக்கெல்லாம் பூவும் பூசையும் தகுமே” (2. 2, 3) என்றதன் வியாக்கியானத்தைக் கேட்ட போதே கையிலிருந்த பூப்படலிகையையும் உருத்திராக்கச் சின்னங் களையும் வீசி யெறிந்து தகாது, தகாது" என்று நம்பி திருவடிகளில் அடைவுகெட விழ, நம்பியும் அவரைப் போரக் கடாட்சித்து திருத்திப் பணி கொண்டார். இராமாநுச தரிசனம் பரப்புவதில் முக்கியமான தொண்ட ராகத் திகழ்ந்தார். (பாசுரம்-5, 108, 112, 127, 135, 154, 190, 195. 242 காண்க). எமபெருமானார் : இவர் இராமாநுசர், பூ பெரும்பு துரில் பிறந்தவர். தந்தையார் கேசவ தீட்சிதர்: தயார் காந்திமதி. திருத்தமக்கையார் நாச்சியாரம்மன். நம் பெருமாள் உடையவர்" என்றும், தேவப் பெருமாள் யதிராசர் என்றும், திருவரங்கப் பெருமாளரையர் இலட்சு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/573&oldid=921406" இலிருந்து மீள்விக்கப்பட்டது