பக்கம்:வைணவ உரைவளம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 31 ஆயர்ஏற்றை அமரர்கோவை அந்தணர்தம் அமுதத்தினை சாயைபோலப் பாடவல்லார் தாமும் அணுக்கர்களே." |வேயர்-பெரியாழ்வாருடைய குலம்; கோவலன் -கோபாலன்; முகில்-மேகம்; ஆயர் ஏறுஇடையர்கட்குத் தலைவன்; அமரர்-நித்திய சூரிகள்; அந்தணர்-மகரிஷிகள்; சாயைநிழல்.) இப்பாசுரம் பெரியாழ்வார் திருமொழியின் இறுதிப் பாசுரமாகும். இந்தத் திருமொழி ஒதுவார்களுக்குப் பலன் சொல்லித் தலைக்கட்டுவது. வேயர் குலத்தில் தோன்றிய விஷ்ணுசித்தன் இதயத்தில் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் கோபாலனும், மேகவண்ணனும், ஆயர்களின் தலைவனும், நித்திய சூரிகளின் தலைவனும், மகரிஷி களுக்கு அமுதம்போல் இனியனுமான எம்பெருமானை இத் திருமொழியால் பாடவல்லவர்கள் அப் பெருமானை எப்போதும் நிழல்போல் அணுகியிருக்கப்பெறுபவர்கள் ஆவார்கள்' என்கின்றார். விட்டுசித்தன் : விஷ்ணுவை சித்தத்திலே உடையவர். மற்ற ஆழ்வார்களின் சித்தத்திலும் எம்பெருமான் எழுந் தருளி யிருந்தாலும், அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும் அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து பரவைத் திரைபல மோதப் பள்ளிகொள் கின்ற பிரானை' " 6, ഒ., 5.4:11, 7. டிெ. திரு. 5 2:10.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/58&oldid=921413" இலிருந்து மீள்விக்கப்பட்டது