பக்கம்:வைணவ உரைவளம்.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு-2 56t பதிகளுள் ஒருவர். கூரத்தாழ்வான் திருநாட்டுக்கெழுத் தருளும்போது இவர் மடியிலே திருமுடியையும் ஆண்டாள் மடியில் திருவடிகளையும் வைத்துக்கொண்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்பர். பிள்ளை விழுப்பரையர் : பட்டர் காலத்து வைணவர் (பாசுரம்-49, 169 காண்க). பெரிய திருமலை நம்பி ; பிறப்பிடம் திருமலை. பூரீ சைல பூர்ணர் என்ற பெயராலும் வழங்குபவர். குமாரர் பிள்ளை திருமலை நம்பி. இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உண்டு. மருமக்கள் எம்பார்.எம்பெருமானார். இவர் எம்பெருமானார்க்கு இராமாயணம் சொன்னதாக வரலாறு. (பாசுரம்-119 காண்க.) பெரிய நம்பி ஆளவந்தாரின் திருவடி சம்பந்தி. பெரு மாள் நியமனத்தால் இளையாழ்வாரைக் (இராமாநுசரைக்) காண வருகையில் மதுராந்தகத்தில் ஏரி காத்த பெருமாள் கோயிலில் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரம் செய்து துவயத்தை உபதேசித்தவர். பிறந்த இடம் திருவரங்கம். மகா பூர்ணர், பூர்ணாசாரியர், பராங்குச தாசர் என்ற பெயர்களாலும் வழங்கப்பெறுபவர். இவர் திருக்குமாரர் புண்டரீகர் (பாசுரம்-145 காண்க). பெற்றி நஞ்சீயரிடம் திவ்யப் பிரபந்தங்களின் சிறப் பான பொருள்களைக் கேட்ட முதலிகளில் ஒருவர்; சீடருங் கூட (பாசுரம்-7, 46, 238 காண்க). மிளகாழ்வான்: 74 சிம்மாசனாதிபதிகளுள் ஒருவர். திரு ஆனைக்காவில் இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்த பாலைக் கொண்டு ததியாராதனத்தில் சேர்ப்பிப்பதை அறிந்த மிளகாழ்வான் அப்படிச் செய்யலாகாதெனத் தடுத்தவர். பிரசாதத்திற்கு முழு மிளகை அம்மியில் நுணுக்காமல் வை.-36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/583&oldid=921417" இலிருந்து மீள்விக்கப்பட்டது