பக்கம்:வைணவ உரைவளம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 39 கைம்மாறிலேனே' என்ற விடத்திற்கு சீயர் அருளிச் செய்வது எங்ங்னே?' என்று கேட்டார். அவரும், நீ செய்யும் உதவிக்கு இத்தலையால் செய்வதொன்றுண்டோ வென்று என் தலையை உனக்காக்கி, காலமெல்லாம் உன் காலில் வணங்கி இருப்பேன் என்கிறாள்' என்று சீயர் அருளிச் செய்யும்படி என்று நம்பிள்ளை அருளிச் செய்யக் கேட்டு, பெற்றி சுவாமி இதற்கு மிகவும் கொண்டாடி , 'சுவாமி அடியேனுக்கு அடிக்கடிப் பயணம் செய்ய நேரிடு மாகையால் சுவாமி சந்நிதியில் இடைவிடாமல் காத்துக் கொண்டிருந்து அருளிச் செயல்களின் எல்லாப் பொருள் களையும் கேட்கப் பேறில்லாமையால் பல சிறப்புப் பொருள்களை இழந்துவிட நேரிடுகின்றது; அடியேன் வெளியே போனால் இதற்கென்ன பொருள்? இதற்கென்ன பொருள்?' என்று பலர் என்னைக் கேட்க வருவர்; அப்போது சுவாமி அருளிச் செய்யும் பொருள் சிறப்பு என் நெஞ்சில் தோன்றும்படி ஆசிகற வேண்டுமென்று முன்னமே சீயர் சந்நிதியில் அடியேன் வேண்டினேன்; அவரும் * அப்படியே தோன்றும் என்று ஆசி கூறினார்; ஆயினும் அடியேனுக்கு அந்த ஆசி பலிக்கக் காண்கின்றிலேன்; சீயர் அருளிச் செய்யும் பொருள் எனக்குத் தோற்றுவதில்லை; அருளிச் செயல்களில் பொருள்கள் குருகுல வாசம் பண்ணிக் குட்டுப்பட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தக்கவையே யன்றி வரம் பெற்று அறிந்து கொள்ள இயலுமா? ஆகை யால்தான் சீயர் அளித்த வரம் பாவியேனுக்குப் பலிக்க வில்லை என்று சொல்லிப் போனார்.' 8 நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்குங்ான் நூறு தடாவில்வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்ததேன்; நூறு தடாகிறைந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/66&oldid=921439" இலிருந்து மீள்விக்கப்பட்டது