பக்கம்:வைணவ உரைவளம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வைணவ உரைவளம் ஈர்த்திடுகின்றன - வலிக்கின்றன; கயிறு. அசைத்து-கயிறு தளர்ந்து; போது-காலம்; உய்த்திடுமின்-கொண்டு சேர்த்து விடுங்கள்.1 தன்னைக் கண்ணன் இருக்குமிடம் கொண்டு சேர்க்கு மாறு தன்னிடத்தில் பரிவுள்ளவர்களை ஆண்டாள் கேட்கும் திருமொழியிலுள்ள பாசுரம் இது. இதில் ஆண்டாள், கறுத்துக் குளிர்ந்த மேகங்களும், கருவிளைப் பூவும், காயாம் பூவும் கண்ணபிரானுடைய திருமேனிக்குப் போலியாயிருக்கின்றபடியாலும், தாமரைப் பூக்கள் அப்பிரானுடைய திவ்விய அவயவங்களுக்குப் போலியா யிருக்கின்றமையாலும் அவையாவும் கண்ணன் பக்கலில் நீயும் போ' என்று என்னை வலிக்கின்றன; பசு மேய்க் கின்ற சிரமத்தாலே வேர்த்து, பசியினால் வருந்தி, வயிறு தளர்ந்து வேண்டிய உணவு உண்ண வேண்டிய காலம் இது’ என்று ரிஷி பத்தினிகளின் வரவை எதிர்பார்த்திருந்து நெடு நோக்குக் கொண்டிருக்கும் இடமான பக்தவிலோசனம் என்கின்ற இடத்திற்கு என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்' என்கின்றார். பக்த விலோசகம் : இது யமுனை யாற்றங்கரையருகி லுள்ள ஒரு புண்ணிய புலம். கண்ணனும் பலராமனும் ஒரு நாள் பசுக்களுடனும் இடையர்களுடனும் யமுனை யாற்றங்கரையில் செல்ல நெடும்போது ஆநிரைகளை மேய்த்துக் களைத்து ஆற்றங்கரையில் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தனர். இடைச்சிறுவர்களால் பசிக்கொடு மையைத் தாங்க முடியவில்லை. அவர்கள் கண்ணன் பலராமர்களை நோக்கித் தங்கட்கு உணவு ஏற்பாடு செய் தருளுமாறு வேண்டினர். அவர்கள் நிலையையறிந்த கண்ணன், பிள்ளைகாள், அண்மையில் சில அந்தணர்கள் *ஆங்கிரஸ்' என்ற வேள்வியை அநுசரித்து வருகின்றனர். நீங்கள் அவர்களிடம் சென்று என் பெயரையும் என் அண்ணன் பெயரையும் குறிப்பிட்டு நாங்கள் இன்னாரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/69&oldid=921442" இலிருந்து மீள்விக்கப்பட்டது