பக்கம்:வைணவ உரைவளம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாங்குறு காரைக் குடியினிற் கம்பன் பாலமு துண்டுசெம் மாந்து தேங்கிய களிப்பை மழையெனப் பொலியத் திருமகள் நாயகன் பொலியும் வேங்கடம் வாவா’ என்றுவந் தழைக்க மேவியங் கொப்பிலாத் தமிழை ஓங்குறச் செய்தார்; அருங்கலைக் கோனென் றுவந்தது குன்றையா தீனம்.

கற்றவர் பராவும் வேங்கடக் குன்றில் கனிவொடு மேவிடும் போதில் பெற்றியல் மிக்க வைணவக் கடலிற் பெட்புடன் பன்முறை தோய்ந்தும் கற்றவத் திருவாய் மொழியினை யாய்ந்தும் கயமுறுத் தந்த நூல் தேர்ந்து பற்றுடன் டாக்டர்’ என்றுயர் பட்டம் பண்புடன் தந்தனள் தமிழ்த்தாய். ஓங்கிய தமிழ்த்தாய் இதயமாய்ப் பொலியும் ஒப்பிலா வாய்மொழி ஆய்ந்து பாங்குறத் தந்த தத்துவ கன்னுரல் பாய்தலாற் புவிஎங்கும் இலங்கும் ஆங்கிலம் இனிய சருக்கரைக் குன்றம் அமைவுறக் கரைந்தபாற் கடலாய் ஈங்குயர் சுவையைப் பெற்றது; தமிழ்த்தாய் இதயத்தில் உவகைபொங் கியதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/7&oldid=1528131" இலிருந்து மீள்விக்கப்பட்டது