பக்கம்:வைணவ உரைவளம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 வைணவ உரைவளம் அந்தணப் பெண்டிர் இவ்வண்ணம் நெடுநாள் வரையில் நாடோறும் பகலில் உச்சி வேளையில் உணவு வகைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்களென்றும், ஒவ்வொரு நாளும் அவர்கள் அடிசில் கொணரும் சமயத்துக்குக் கண்ண பிரானும் களைப்புடன் அவ்வடிசிலை எதிர்பார்த்து அத் திக்கையே நோக்கியிருப்பவனென்றும் பிரசங்கத்தில் அழகிய மணவாள சீயர் விளக்குவர். பக்தவிலோசனம் : :பக்தி என்ற வட சொல்லுக்கு *அன்னம்’ என்று பெயர்; விலோசனம்' என்பதற்குப் "பார்வை' என்று பொருள். எனவே, இக்கூட்டுச் சொல் சோறு பார்த்திருக்கும் இடம் என்பதாயிற்று. 1O பெருமாள் திருமொழி மறந் திகழு மனமொழிந்து வஞ்ச மாற்றி ஐம்புலன்கள் அடக்கியிடர்ப் பாரத் துன்பம் துறந்து இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான அறந்திகழும் மனத்தவர்தம் கதியைப் பென்னி அணியரங்கத் தரவணையிற் பள்ளி கொள்ளும் நிறம் திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே." (மறம்-கொடுமை; திகழும்-விளங்கும்; மாற்றிபோக்கி; இடர்பாரம்-துக்கத்தை விளைவிக் கும் பெருஞ்சுமையாக இருக்கும்; துறந்துவேர றுத்து இருமுப்பொழுது-பஞ்ச காலங் கள் எல்லை இல்லா-அளவிறந்த தொல் _Tন্ত মেল জলমল

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/71&oldid=921445" இலிருந்து மீள்விக்கப்பட்டது