பக்கம்:வைணவ உரைவளம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 45. நெறி-பழைய மரியாதை, அறம் - தர்ம சிந்தை; கதி-அடையும் பொருள்; நிறம்அழகு; மாயோன்-எம்பெருமான், கண்டுசேவிக்கப் பெற்று: மல்க-ததும்ப.1

  • திருவரங்கப் பெருமானை என்று கண்டு மகிழ்வேன் என்னும் பெருமாள் திருமொழியில் ஒரு பாசுரம். முதல்

இரண்டடிகளும் வைணவ லட்சணம் கூறுவன. பூர் வைணவர்கள் கொடுமையில் தோய்ந்து நிற்கும் மனத்தை ஒழிப்பவர்கள்; வஞ்சனைகளைப் போக்குபவர்கள், கொடிய இந்திரியங்களைப் பட்டிமேயாதபடி அடக்கு பவர்கள்; பாரமாய பழவினை பற்றறுத்து (கமலனா-5) நிற்பவர்கள்; ஐந்து பொழுதிலும் இறைவனைத் துதித்து அளவிறந்த பழைய மரியாதையில், நிலை நிற்பவர்கள். இவர்கட்கு அடையத்தக்க பொருளாய் இருப்பவன் அரங்க நகர் அப்பன். இப்பெருமானைச் சேவிப்பது எந்நாளோ?' ' என்கின்றார். "இருமுப்பொழுதேத்தி : இரண்டும் மூன்றும் ஐந்து; பஞ்ச கால பராயணர்களாய் என்றபடி. இதன் விளக்கம்: ஒரு நாளின் பகற்பொழுதை பிராத காலம், சங்கவ காலம், மத்தியான காலம், அபராஹ்ன காலம், சாயங்காலம் என்று ஐந்து சிறு பொழுதுகளாகப் பிரித்து இவற்றில் முறையே அபி கமனம், உபாதானம், இஜ்யா, சுவாத்தி யாயம், யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களை அனுட்டிக்க வேண்டும் என்று பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்களில், விதிக்கப் பெற்றுள்ளது. இரவில் அநுட்டிக்க வேண்டு வதும் யோகா துஷ்டானமே. இவற்றின் விவரம் வருமாறு: முதலாறு நாழிகை யாகிய பிராத காலத்தில் தீர்த்தமாடுதல், சந்தியா வந்தனம், செபம் முதலிய காலைக் கடன்களைச் செய்து முடித்துத் தாம் ஆராதிக்க வேண்டிய எம்பெருமானுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/72&oldid=921446" இலிருந்து மீள்விக்கப்பட்டது