பக்கம்:வைணவ உரைவளம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சந்த விருத்தம் 11 கடந்தகால்கள் நொந்தவோ நடுங்குஞாலம் ஏனமாய் இடங்தமெய் குலுங்கவோ விலங்குமால் வரைச்சுரம் கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள் கிடந்தவா றெழுந்திருந்து பேசுவாழி கேசனே." [நடந்த-உலகளந்த ஞாலம்-பூமிப் பிராட்டி: ஏனம்-பன்றி; இடந்த-தோண்டி எடுத்த; மெய்-திருமேனி; விலங்கு-தடையாயிருக் கும்; மால்வரை-பெருத்த மலை; சுரம்பாலை நிலம்; கடந்த-கடந்து கொண்டு வரு கின்ற; கால்-வாய்க்கால்கள்; கரை-கரை மீது; கிடந்த ஆறு-திருக்கண் வளர்ந்தருளு கின்றபடி) திருமழிசைப்பிரான் அருளிய திருச்சந்த விருத்தத்தில் உள்ளது இப்பாசுரம். இதில் ஆழ்வார், அழகிய திருவடி களைக் கொண்டு உலகங்களை அளந்ததனால் உண்டான தளர்ச்சியோ? அன்றி பன்றியுருவாய் நடுங்குகின்ற பூமியை இடந்து கொண்டு வந்ததனாலுண்டான தளர்ச்சியோ?” என்று காவிரிக்கரையின்மீதுள்ள திருக்குடந்தையில் திருக் கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதப் பெருமானை வினவு 19. திருச்சந்த-1ே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/74&oldid=921448" இலிருந்து மீள்விக்கப்பட்டது