பக்கம்:வைணவ உரைவளம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 51 T 3 மொய்த்தவல் வினையுள் கின்று மூன்றெழுத் துடைய பேரால் கத்திர பந்து மன்றே பராங்கதி கண்டு கொண்டான் இத்தனை அடிய ரானார்க் இரங்கும்.கம் அரங்க ணாய பித்தனைப் பெற்றும் அக்தோ! பிறவியுள் பிணங்கும் ஆறே!" மொய்த்த-அடர்ந்து கிடக்கின்ற; வல்வினைகொடிய பாவ ராசி; மூன்றெழுத்துகோவிந்த்' என்ற நாமம்; கத்திரபந்துrத்திர பந்து: பராங்கதி-சிறந்த பதவி: இரங்கும் - அருள்புரியும்; பித்தனை - அடி யாரிடத்தில் மயங்குபவனை; பெற்றும்தலைவனாகப் பெற்றும்; பிறவி-சம்சாரம்: பிணங்கும்-வருந்துகின்ற; ஆறு-விதம்) இதுவும் திருமாலை'யிலுள்ள ஒரு பாசுரம். இதில் ஆழ்வார், கொடிய பாவியான கூடித்திர பந்துவும் சிறந்த பதவியைக் கண்டு அநுபவிக்கப் பெற்றான்; இத்தனைப் பாவிகட்கும் அருள்புரிகின்ற அடியார் பித்தினையுடைய அழகிய மணவாளனைத் தலைவனாகப் பெற்றும் சம்சாரத் தில் அகப்பட்டு வருந்துகிற விதம் என்னே!' என்று வியக் கின்றார். 'மூன்றெழுத்துடைய பேரால் _ இன்ன திருநாமம் என்னாதே இரகசியமாய்ச் சொல்லிற்று-ருசி பிறந்த பின்பு 21. திருமாலை-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/78&oldid=921452" இலிருந்து மீள்விக்கப்பட்டது