பக்கம்:வைணவ உரைவளம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வைணவ உரைவளம் தசையும் வேண்டா நாற்றமிகும் உடலைவிட்டு மாயவன் சேற்றள்ளற் பொய் நிலத்தைக் கடந்து', நலமந்தமில்ல தோர் நாடுபுகும் எண்ணத்துடன் துணிந்து அங்ங்னமே செய்து பரம பாகவதனாகி வீடு பேறும் எய்தினன் என்பது. வரலாறு. 1 4 கமனும்முற் கலனும் பேச, கரகில்கின் றார்கள் கேட்க, கரகமே சுவர்க்க மாகும் நாமங்கள் உடையன் நம்பி; அவனதுார் அரங்க மென்னாது, அயர்த்துவீழ்ங் தளிய மாந்தர் கவலையுள் படுகின் றார்;என்(று) அதனுக்கே கவல்கின் றேனே." (நம்பி-பரிபூரணன்: அளிய-அருமந்த; அயர்த்து -மறந்து; வீழ்ந்து-விஷயாந்தரப் படுகுழி யில் வீழ்ந்து; கவலை-துக்கம்; கவல்தல்கவலைப் படுதல்) இதுவும் திருமாலையில் உள்ள பாசுரம். இதில் ஆழ்வார், 'நாமங்கள் உடைய நம்பியின் திவ்விய தேசம் திருவரங்கம்' என்று சொன்னாலும் போதும்; இங்ங்னிருக்க வும் இவர்கள் விஷயாந்தரப் படுகுழியில் தலை கீழாக விழுந்து வருந்துகின்றார்கள்' என்று கவல்கின்றார். 24. திருமாலை-12 2. இவன் வரலாறு 'விஷ்னு தர்மத்தில் 96-வது அத்தியா யத்தில் கூறப் பெற்றுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/81&oldid=921456" இலிருந்து மீள்விக்கப்பட்டது