பக்கம்:வைணவ உரைவளம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வைணவ உரைவளம் அமலன்-தாழ்ந்த வகுப்பினரான் தாம் சந்நிதிக் குள்ளே புகுவதனால் பெருமாளுக்குப் பெரிய குற்றம் உண்டாகிவிடும் என்று அஞ்சியிருந்தவர் அந்த ஐயம் தவிர்ந்தமை தோற்ற அமலன்' என்றார். விமலன்-தமது சிறுமையை நோக்காதே தம்மைப் பாகவதர்க்கு ஆட்படுத்தி ஒரு சீரிய பொருளாக ஆக்கு கையாலே எம்பெருமானது திருமேனியிற் பிறந்த ஓர் அழகிய புகரை அநுபவிப்பார் விமலன்' என்றார். கிமலன்-பிரமன் சிவன் முதலானோரும் அஞ்சி அணுக வேண்டும்படியான ஐசுவரியம் இருக்கச் செய்தேயும் அடியார்க்கு எளியனாயிருக்குந் தன்மையை வெளியிட்டு நிற்குமவன் என்பார் நிமலன்' என்றார். நின்மலன் - அடியார்களின் குற்றங்களைக் காண்கை யாகிற குற்றமில்லாதவன் என்றபடி. அடியார்களுடைய குற்றங்களைக் கண்டாலும் அவற்றைப் போக்கியமாகக் கொள்ளுமவனிறே எம்பெருமான். ஐதிகம்: பிள்ளை திருகறையூர் அரையரைச் சிலர், * பெரிய பெருமாளை அதுபவிக்க இருந்த இவ்வாழ்வார் திருவேங்கடமுடையான் பக்கல் போவானேன்?' என்று கேட்க, ஆற்றிலே அழுந்துகிறவன் ஒருகாலைத் தரை யிலே ஊன்றினால் பிழைக்கலாமோ என்று காலந் தாழ்க்குமாப் போலே, இவரும் பெரிய பெருமாள் அழகிலே அழுந்துகின்றவராகையாலே, திருமலையில் கால் தாழ்ந் தார்' என்றாராம். :ஒருவனைக் கவிபாடும்போது அவனுடைய வரலாறு சொல்லிக் கவிபாட வேணும்; பரம பதத்தில் நின்றும் வடமதுரையிலே தங்கித் திருவாய்ப் பாடிக்கு வந்தாப்போலே வைகுண்டத்தில் நின்றும் திரு மலையிலே தங்கியாய்த்துக் கோயிலுக்கு வந்தது; அவ் வரலாற்றைப் பாடுகிறபடி' என்றும் ஒருகால் அருளிச் செய்தாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/89&oldid=921464" இலிருந்து மீள்விக்கப்பட்டது