பக்கம்:வைணவ உரைவளம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 63 T 9 உவந்த உள்ளத்தனாய் உலகமளந் தண்டமுற கிவந்த நீள்முடியன் அன்றுநேர்ந்த நிசாசரரை கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத் தம்மான்,அரைச் சிவந்த ஆடையின் மேல்சென்ற தாமென சிந்தனையே’ {உவந்த-மகிழ்ச்சியோடுகூடிய, அண்டம் உறஅண்டகடாகத்தளவும் சென்று; நிவந்தஉயர்த்தியை அடைந்த அன்று-முற்காலத் தில், நேர்ந்த - எதிர்த்து வந்த நிசாசரர்அரக்கர்களை (நிசாசரர்-வடசொல்; இரவில் திரியுமவர் என்பது பொருள்) கவர்ந்த-உயிர் வாங்கிய; வெம்கணை - கொடிய அம்பு; காகுத்தன்-இராமன் (ககுஸ்தன் என்று புகழ் பெற்ற அரசனது குலத்தில் பிறந்தவன்; எருது வடிவங் கொண்ட இந்திரனது முகப்பின் மேலேறிப் போர் செய்யச் சென்றதலால் இவ் வரசனுக்குக் ககுஸ்தன் என்று பெயராயிற்று; ககுத்-முசுப்பு: ஸ்தன் இருப்பவன்); அரைஇடுப்பு: சிவந்த ஆடை - பீதாம்பரம், சிந்தனை-நினைவு: சென்றது-பதிந்தது) முன் பாசுரத்தில் கமலபாதம் வந்து' என்றதும், இப் பாசுரத்தில் ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனை' என்றதும் உற்று நோக்கத் தக்கவை. முதலில் எம் பெருமான் தானாக ஆழ்வாரை அடிமைகொள்ள மேல் 30. அமலனாதி-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/90&oldid=921466" இலிருந்து மீள்விக்கப்பட்டது