பக்கம்:வைணவ உரைவளம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 வைணவ உரைவளம் விழுந்தபடியும், பிறகு ஆழ்வார் ருசிகண்டு தாம் மேல் விழுந்தபடியும் இவற்றால் தோற்றும். ஈன்ற நாகானது, (பசுவானது) தன் கன்றுக்கு முதலில் முலைச் சுவை தெரி யாமையாலே தானே தன் முலையை அதன் வாயிலே கொடுக்கும்; பின்பு சுவடறிந்தால் நாகு காற்கடை கொண் டாலும் கன்று அதன்மேல் விழும்; அப்படியே திருவடிகள் தானே வந்து போக்கியமானவாறு கூறினர் முதற் பாசுரத் தில்; இதில் தம்முடைய நெஞ்சு சுவடறிந்து மேல்விழுமாறு கூறுகின்றனர். உலகம் அளந்த வரலாறு: மாவலி என்னும் அரக்கர் கோமான் தன் வல்லமையால் இந்திரன் முதலிய யாவரை யும் வென்று மூன்று உலகங்களையும் தன் வசப்படுத்தி அரசாட்சி செய்துகொண்டு செருக்குற்றிருந்தான், அரசு இழந்ததேவர்கள் திருமாலைச் சரணமடைந்துதம்நிலையை மீண்டுப் பெற வேண்டினர். அப்பெருமான் குள்ள வடிவ ,ான வாமனாவதாரங் கொண்டு காசியப முனிவருக்கு ஆதித் தேவியிடம் தோன்றிய அந்த ண மாணியாகி, வேள்வி யியற்றி யாவர்க்கும் வேண்டிய அனைத்தையும் கொடுத்து வந்த அந்த மாவலியிடம் சென்று தவம் செய்வதற்கு தன் காலடியால் மூவடி மண் வேண்டினான். மாவலியும் அது கொடுத்தற்கு இசைந்து அவன் வேண்டிய நிலத்தைத் தாரை வார்த்துத் தந்தான். உடனே வாமனன் திரி விக்கிரமனாக விண்அளாவி வளர்ந்து ஒரடியால் மண்ணுல கத்தையும், மற்றோரடியால் விண்ணுலகத்தையும் அளந்து தானமாகப் பெற்ற பின்னுமோரடி நிலத்திற்கு இடமில்லா தொழியவே அதற்காக அவன் வேண்டுகோளின்படி அவனது முடியில் தன் திருவடியை வைத்து அவனைப் பாதாளத்தில் அழுத்தி அடக்கினன் என்பதாம். மண்ணுலகத்தை அளந்த தில் அதன் கீழுள்ள பாதாள லோகமும் அடங்கிற்று; எனவே எல்லா உலகங்களையும் அளந்தானாயிற்று. உலகம் அளக்கும்போது அகங்காரிகளோடு வேற்று. மையின்றி எல்லார் தலையிலும் திருவடியை வைத்து அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/91&oldid=921467" இலிருந்து மீள்விக்கப்பட்டது