பக்கம்:வைணவ உரைவளம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வைணவ உரைவளம் 22 கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன். என்உள்ளம் கவர்ந்தானை அண்டர்கோன் அணிய ரங்கன்என் அமுதினைக்) கண்ட கண்கள் மற்றொன்றினைக் கானாவே." |கொண்டல்-மேகம்; வண்ணன்-நிறத்தையுடை. யவன்; கோவலன் - கோபாலன்; கவர்த் தான்-கொள்ளை கொண்டவன்; அண்டரி கோன்-நித்தியசூரிகட்குத் தலைவன்: கண்டசேவிக்கப்பெற்ற; மற்று ஒன்றினை - வேறு ஒன்றினையும் (பரமபத நாதனையும்); காணா-காண மாட்டா.1 இந்த ஆழ்வார் அடியேன்" என்னுமதொழிய இப் பிரபந்தம் தலைக்கட்டுமளவிலும் தம்முடைய பேரும் ஊரும் மறக்கும்படி தாம் பெற்ற அநுபவத்திற்கு இனி ஒர் இடையூறு (விச்சேதம்) வாராதபடி பெரிய பெருமாள் அருள்புரிந்தமையைக் கண்டு வியந்து அப்பெரிய பெருமாளு டைய திருமேனியிலேயே தாம் நீராக ஒன்றியபடியைப் பேசித் தலைக்கட்டுகின்றார். ஐதிகம்; கூரத்தாழ்வான் தம் சுந்தர பா ஹ9ஸ்தவத்தில் பண்டு யசோதைப் பிராட்டி முத்தங் கொடுத்த சுவடு இன்றும் அழகர் திவ்விய கன்னங்களில் திகழா நிற்கும் என்று அநுபவித்தாற்போல, இவரும் பண்டு வெண்ணெ 88. அமலனாதி-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/97&oldid=921473" இலிருந்து மீள்விக்கப்பட்டது