பக்கம்:வைணவ உரைவளம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாயிரம் 71 புண்ட முடை நாற்றம் இன்றும் பெரிய பெருமாள் திருப் பவளத்திலே கமழா நிற்பதாக அநுபவிக்கின்றார். தசரத சக்கரவர்த்தி தன்னுடைய அரசு ஐசுவரி யத்தைப் புசிக்கைக்கு எனக்கொரு பிள்ளை வேணும்" என்று நோன்புநோற்றுப் பெருமாளைப்பெற்றதைப்போல, நந்தகோபரும் கானாயன் கடிமனையில் தயிருண்டு நெய் பருக நந்தன் பெற்ற ஆனாயன்' என்றபடியே திருவாய்ப் பாடியில் பால் முதலானவற்றின் நிறைவு அடங்கலும், (கவ்ய ஸ்ம்ருத்தி அடங்கலும்) பாழ்போக வொண்ணா தென்று இத்தை அமுது செய்கைக்காக நோன்பு நோற்றும் பெற்ற பிள்ளையாய்த்து பூரீ கிருஷ்ணன். பெரிய பெருமாள் கொறுப்டை (உதட்டை) முகர்ந்து பார்த்தால் இப்போதும் வெண்ணெய் நாறா நிற்குமாம். கண்ணிநுண் சிறுத்தாம்பு 23 அருள்கொண்டாடும் அடியவர் இன்புற அருளி னான்.அவ் வருமறை யின்பொருள் அருள்கொண் டாயிரம் இன்தமிழ் பாடினான் அருள்கண் டிர்இவ் வுலகினில் மிக்கதே." [அருள் - இறைவனின் கருணை; அடியவர் பக்தர்கள்; இன்புற-களிப்புற: அருள் கொண்டு-பரமகிருபை கொண்டு: ஆயிரம்ஆயிரம் திருவாய் மொழி; மிக்கது-அதிசயித் துள்ளது) 39. 40. கண்ணி துண். 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/98&oldid=921474" இலிருந்து மீள்விக்கப்பட்டது