பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுராவின் வைனவப் புராணங்கள்


காவியங்களாகிச் சுவைகளையும் ஏற்று, தெய்வபக்தி,நல்லொழுக்கம் போன்ற நற்பண்புகளை வளர்த்து வருகின்றன.

தமிழில் புராணம் பற்றிய குறிப்பு: புராணம்’ என்பது பழமை சார்ந்த வரலாறு என்ற வழக்கு தமிழில் இருந்தது என்பதை அப்பர் தேவாரத்துள் இரு பதிகப் பெயர்களாலும் அறியலாம். நாலாம் திருமுறையில் ஒரு பதிகம் (4.14) தச புராணம் என்ற பெயர் பெறுகின்றது. இதன் பாடல்கள் சிவபிரான் ஆலகால விஷம் உண்டது (, முடியோடு பாதம் அறியாமல் நின்றது (2) முதலான பராக்கிரமச் செயல்களைச் சொல்லித் துதிக்கின்றன. மற்றது இலிங்க புராணக் குறுந்தொகை என்பது ஐந்தாம் திருமுறையில் ஒரு பதிகம் (5.96). செங்கணானும் பிரமனும் தேடச் சுடர் வடிவாய் சிவபெருமான் நின்ற நிலையை மட்டுமே கூறுவது. இவ்விரு பதிகங்களும் பழங்கதைகளை மட்டுமே எடுத்துக் கூறுவதால் இப்பதிகங்கள் புராணம்’ என்று சிறப்பாய்ப் பெயர் அமைக்கப் பெற்றன என்பதாக அறிய முடிகின்றது.

திருமூலர் 'இலிங்க புராணம்’ என்ற ஒரு பகுதியை அமைத்துள்ளார்[1]. இங்கு சிவபராக்கிரமங்கள் ஐந்தினைக் குறிப்பிடுகின்றார். மலைமகனார் மகளாகி அர்ச்சித்து பக்தி செய்தல் {1, சிவபெருமான் திருமாலுக்கு ஆழியையும் நான்முகனுக்கு வாளும் கொடுத்தமை (2), கைலாய மலையைத் தூக்கிய இராவணனை நெரித்து பின் ஆட்கொள்ளல் (3), தண்டிக்கு அருளியது (4), தேவர்கட்கு அருளியது (5) என்பவை காண்க

'இலிங்க புராணக் குறுந்தொகை என்ற பெயரைக் கொண்டு அப்பர் காலத்தில் வடமொழி இலிங்க புராணம்[2] தமிழில் நல்ல ஆட்சி பெற்றிருந்ததென்றும் கருதலாம். இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து,

இலிங்கத்து இட்ட புராணத்திரும்,
சமணரும், சாக்கியரும்,
வலிந்து வாதுசெய்வீர்களும், மற்றும்நும்
தெய்வமும் ஆகிநின்றான் (திருவாய் 410:5)


  1. 2 திருமத் இரண். தத்திரம் இலிங்க புராணம் 347-52
  2. 3 இலிங்க புராணம் என்ற பெயரில் வரகுணராம பாண்டியன் என்பாரால் பாடப்பெற்ற ஒரு தனி நூலும் உண்டு (16ஆம் நூற்றாண்டு.
6