பக்கம்:வைணவ புராணங்கள்.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வை.பு.இ.இதிகாக பாகவதம்


கண்ணனைக் கண்ட ஆயமங்கையர் நிலை 40க்கு மேற்பட்ட பாடல்களால் விரிக்கப்பெறுதல் ஆகியவை அடங்கும். மேலும் 'ஆடவர் பெண்மையை அவாவும் தோள்’ என்பன போன்ற கம்பராமாயணத் தொடர்கள் அதிகமாகப் பயின்று வருகின்றன. வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், கலிவிருத்தம் போன்ற சீர்குறைந்த பாடல்கள் காணப்பெறுகின்றன. பரீட்சித்து பிறத்தல், தருமன் முதலானோர் வீடுபேறு பெறுதல், பரீட்சித்து ஆட்சி, சாபம் ஏற்றல் ஆகியவையும் அடங்கும். இவன் சிறப்பை ஆசிரியர் உணர்த்தும் முறை கவனிக்கத்தக்கது.

தள்ளரும் கொடையினால் சார்ந்த அஞ்சிறைப்
புள்ளினுக்கு உயர்துலைப் புக்க வேந்துஇவன்;
எள்ளவில் அன்பினால் எறிந்த துரணெழும்
வள்ளுகிர் மடங்கலை வழுத்து தோன்றலே.
[வேந்து - சிபி, தோன்றல் - பிரகலாதன்]

மேதகு தயரத ராமன் மெய்ம்மையால்;
தீதகல் விசயன் வெஞ்சிலை யினால்இவன்;
ஏதமில் பொறுமையால் இனிய பார்மகள்;
ஒதிய தாய்உல குயிர்பு ரத்தலால்
[விசயன் - அர்ச்சுனன் பார்மகள் - பூமாதேவி]

இரண்டாம் கந்தம்: இது 3 அத்தியாயங்களைக் கொண்டது. சுகர் திருவாயினின்றும் தத்துவ அமுதம் சுரக்கின்றது. மாயவனிடத்து ஈடுபடாத கண், மூக்கு, கைகள், நா, தலை, உளம், கால், செவி என்பன பயனற்றவை என்று காட்டப் பெறுகின்றன.[1] இக்கந்தத்தின் முதற்பாடல் இது.

இறந்தொழிந் ததுவெங் கூற்றம்
என்றுளத் துணர்ந்தார் போலும்


  1. 3 அப்பர் அடிகளின் திருஅங்கமாலை (4.9) ஈண்டு நினைவு கூர்ந்து மகிழத்தக்கது.உடலுறுப்புகள் யாவும் இறைவனைத் தொழுவதற்காகவே என்ற கருத்து எல்லா அருளாளர்களிடமும் காணப்படுகிறது.

21