பக்கம்:வைதேகியார்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வைதேகியார் மாறு பகர்வாராயினர்: "யான் பிரகஸ்பதியின் புதல்வரும், அறிவில் தம் தந்தையாருக்கு ஒப்பானவருமாகிய குசத் துவஜர் என்பவரின் குமாரி. அவர் வேதத்தை ஒதிக்கொண் டிருந்தபோது, அவ்வேத வாக்கே எனத் தற்செயலாய் அவ ரது வாக்கினின்றும் யான் தோன்றினேன். ஆதலால், அப் பெரியார் என க்கு வேதவதி எனப் பெயரிட்டனர். யான் மங்கைப்பருவம் அடைந்ததும், தேவர், கந்தருவர், யக்ஷர், ராக்ஷசர், அசுரர், பன்னகர் முதலிய பலரும் என்னைத் தத்தம் இல்லக்கிழத்தியாக வரிக்கக் கருதி, என் தந்தையா ரிடம் வந்தனர். ஆனால், லீலாவிபூதி, நித்திய விபூதி இரண் டிற்கும் அதிபராகிய ஸ்ரீ மகாவிஷ்ணுவே தமக்கு மருகராக வேண்டும் என்பது என் தந்தையார் விருப்பம். ஆதலின், மற்ற எவர்க்கும் என்னை மணஞ் செய்விக்க அவர் இசைந்தி லர். அக்காரணமாக என் தந்தையார் மாட்டு அழுக்காறு கொண்ட தம்பு என்னும் ஓர் அசுரத் தலைவன், ஒரு நாள் இரவில் வந்து என் தந்தையாரைக் கொலைபுரிந்தான். அதை ஆற்றாது என் அன்னையாரும் அவருடன் தீக்குளித்தனர். ஆகவே, பெரியாராகிய என் தந்தையாரின் விருப்பத்தின்படி யான் ஸ்ரீமந்நாராயணரை அடைதற்பொருட்டு இத்தவத்தை மேற்கொண்டேன். அவரே எனக்கு நாயகராவர். அவரை அன்றி வேறொருவரையும் கனவிலும் என் மனம் கருதாது. அன்றியும், மூன்று உலகங்களிலும் நடைபெறும் விஷயங் களை நன்கு உணரும் வன்மையை இத்தவப்பேற்றினால் யான் பெற்றுள்ளேன். அதிகம் கூறி என்? உன் இயல்புகளை யும், எண்ணத்தையும் யான் நன்கு உணர்வேன். ஆதலின், நீ இப்போதே இவணிருந்து நீங்குக. கொடிய செய்கையையுடைய இராவணன், அவ்வம்மை யாரின் கருத்திற்கு மாறாக அவர் அருகிலே நெருங்கி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/10&oldid=1563325" இலிருந்து மீள்விக்கப்பட்டது