பக்கம்:வைதேகியார்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைதேகியாரின் முற்பிறப்பு "கல்யாணி, உத்தம லக்ஷணங்கள் யாவும் ஒருங்கே திரண்டு வந்தாலென அழகு பெற்றுப் பொலியும் பெண்கள் நாய கமே, உன் தக்க பருவத்தையும் மிக்க அழகையும் இத் தவத்திற் போக்குவது பயனற்றதாகும். உன்னை அடைவ தற்கேற்ற கம்பீரமும், வீரமும், தவமும் அந்த மகாவிஷ்ணு வுக்குண்டோ? எவ்விஷயத்தில் அவன் எனக்கு இணையா வான்? யோகத்திலும், வன்மையிலும், செல்வத்திலும் சிறந்த என்னை வரிப்பதே உனக்குத் தகுதி,' எனப் பல படப் பிதற்றினான். இவ்வார்த்தைகள் அப்பெண் மணிக்குப் பெரிதும் வெறுப்பைத் தந்தன; அவர் நெஞ்சம் துடிதுடித்தது. ஆத லின், அவர் இராவணனைப்பார்த்து, "அறிவீனனாகிய உன்னைத் தவிர நல்லறிவு வாய்ந்த எவனேனும் விஷ்ணுவை இங்ஙனம் இகழ்வனோ? இஃது உனக்கு அறிவுடைமை அன்று. உன் னிடத்தை நாடிச் செல்,' என்றனர். ஆனால், அவர் அறி வுரைகளுள் ஒன்றையும் மனங்கொள்ளாது தன் அரக்க வன் மையையே பெரிதெனக் கருதிய அந்த நிசாசரன், தன் கரத் தினால் அவரது கூந்தலைப் பற்றி வலித்தனன். இக்கொடிய செய்கை அம்மங்கையாரின் மனத்தைத் துன்புறுத்தியது. உடனே அவர் தம் கரத்தைக் கத்தியென உபயோகித்துத் தம் குழலை இரண்டாகத் துணித்து, அவ னிடமிருந்து மீண்டனர். அவர் மறித்தும் அவனை நோக்கி, "இப்போதே யான் உன்னைச் சபிப்பேன். ஆயினும், நீச னாகிய உன்னால் என் தவத்திற்கு அழிவு உண்டாகுமே என என் மனம் அஞ்சுகின்றது. அற்பனாகிய உன்னால் தீண்டப் பட்ட இச்சரீரத்தை இனி யான் பேணேன். யான் செய்த நற்செய்கை கிஞ்சித்தேனும் உளதாயின், யான் மறுபடியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/11&oldid=1563327" இலிருந்து மீள்விக்கப்பட்டது