பக்கம்:வைதேகியார்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வைதேகியார் பூமிதேவிக்குத் திருக்குமாரியாகத் தோன்றி உன்னை அழிப் பேன், இதுவே சத்தியம், எனக்கூறி, அங்கு ஓங்கி எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்து மூழ்கினர். வானம் மலர் மழை சொரிந்தது. பகை தொலைந்ததெனத் தேவர் உவகை பூத் தனர். உலகம் சீர் பெற்றதெனத் தரும தேவதை மகிழ்ந் தது. 4.வைதேகியாரின் தோற்றம் திருமகளாரின் அமிசமெனப் பெரியோர் கூறும் அவ் வம்மையாரே, ஜனகர் மகவில்லாக் குறையைப் போக்க அவர் யாக சாலையில் ஒரு நாள் சிறு மகவாகி வீற்றிருந்தனர். கலப்பை கொண்டு யாக சாலையை உழச் சென்ற தூய ஜனகர் அவ்வம்மையாரைக் கண்டு மிக்க ஆர்வத்துடன் எடுத்து, மார்புற அணைத்து, உச்சி மோந்து, முத்தமிட்டு, இன்பக் கட லில் ஆழ்ந்தனர். அம்மகளாரின் தேக ஒளி பூமி தேவியே மேற்கிளம்பினளெனக் கூறுமாறு கண்டவர் கண்களைக் கூசச் செய்தது. அதைக் கண்டு ஜனகர் அடைந்த ஆனந்தத்திற் கோர் அளவில்லை. அவ்வம்மையார் கேவலம் உலகக் குழவி அன்று என்பதை ஜனகர் நன்கு உணர்ந்தனர். அவ்வம்மை யாரின் தேக இலக்கணங்கள் அவர் மனத்தைக் கவர்ந்தன. அவர் ஆன்ம சொரூப இலக்கணத்தைத் தெரிய உணர்ந்த தத்துவ ஞானியாரல்லரோ! ஆதலின், அம்மகளாரின் தூய ஆன்ம ஒளி முகத்தில் தேங்குவதைக் கண்டு அவர் நெஞ்சம் புளகித்தது.இக்குழவி திருமகளோ! கலை மகளோ! மண் மகளோ!" என அவர் ஐயுற்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/12&oldid=1563329" இலிருந்து மீள்விக்கப்பட்டது