பக்கம்:வைதேகியார்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைதேகியாரின் தோற்றம் இல் வாழ்க்கையைப் பயன்பெறச் செய்தற்கு இன்றி யமையாததாகிய மக்கட் பேற்றைப் பெறாமலிருத்தல் இல் லறத்தோர்க்குப் பெருங்குறை என்பது யாவரும் அறிந் ததே. இல்லறத்தைத் தக்க முறையுடன் மேற்கொண் டொழுகும் ஞானிகளுக்கும் மகவில்லாக் குறையைத் தாங் கல் கூடாததாகும். ஆனால், அக்குறை ஜனகரைத் துன் புறுத்தவில்லையாயினும், தெய்வ அருளால் கிடைத்த குழவி யைப் பார்த்தவுடன் அவர் மனம் அன்பினால் பிணிக்கப்பட் டது. 'கடந்த ஞானிகளும் கடப்பரோ மக்கட்மேற் காதல்!' மற்றவரைப்போன்று அம்மகவின் தேக வனப்பு முதலிய மேல் தோற்றத்தில் மாத்திரம் ஞானியாராகிய அவர் மயங்கி விடவில்லை. அம்மகவின் முகச்சாயலில் தோன்றிய ஞான ஒளி அவர் மனத்தை வசீகரித்தது. அவர் அஃது இறைவ னால் தமக்கு அளிக்கப்பட்ட பெரும்பேறென நினைத்தார். ஒருவர் தாமே விரும்பிப் பெறும் ஒன்றைக்காட்டிலும், கட வுள் அருளால் பெறும் ஒன்று மிகச் சிறந்ததன்றோ? அதி னும், அது மிக்க மேன்மையுற்றதும், அறிவுடையோரால் போற்றத் தக்கதுமாயின், அதைப் பெரும்பேறென்னாது வேறென் சொல்வது? "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த மக்கட்பே றல்ல பிற. -திருவள்ளுவர் ஆகவே, ஞானத்திற் சிறந்த ஜனகர், சீதா என்னும் கலப் பையை உபயோகித்தபோது தோன்றிய அம்மகவிற்குச் சீதை எனப் பிள்ளைத் திருநாமஞ் சூட்டி, உவகையுடன் வளர்த்து வந்தனர். இன்னும் விதேக நாட்டில் தோன்றிய மையின் வைதேகி என்றும், மிதிலை மன்னர் மகளாரா; தலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/13&oldid=1563331" இலிருந்து மீள்விக்கப்பட்டது