பக்கம்:வைதேகியார்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 வைதேகியார் மைதிலி என்றும், ஜனகர் திருக்குமாரியாராதலின் ஜானகி என்றும் பல திருநாமங்கள் அவருக்கு வழங்கி வரலாயின. ஜனகரும் அவர் இல்லக் கிழத்தியாரும் இக்காலத்துப் பெற்றோர் சிலரைப் போன்று குழந்தை சீதையின் உடலை வளர்க்க உணவையூட்டியதோடு தம் கடமை முடிந்துவிட்ட தாக எண்ணிலர். அதனுடன் அன்பையும் அறிவையும் கலந் தூட்டி ஆன்மாவையும் வளர்ப்பதில் அவர் கண்ணுங் கருத் தும் ஊன்றி நின்றன. தம் பிள்ளைகள் மாக்களாகாமல் மக்கள் ஆவதற்குப் பெற்றோரே பொறுப்பாளராவர். இக்காலத்தில் தாய்மார் தம் மக்களின் பொறுப்புக்கள் யாவையும் வேலைக்காரரிடமே ஒப்பு விக்கின்றனர்; அவ்வாறு ஒப்புவித்தல் தமக்குப் பெருமையும் வேலையொழிவும் ஆம் என நினைக்கின்றனர். இத்தகைத் தாய் மார்களைப் போன்று தத்துவ ஞானியாராகிய ஜனகரின் வாழ்க்கைத் துணைவியார் குறுகிய எண்ணமுடையவரல்லர். சீதையாரைக் கண்டெடுத்த பின், ஜனகருக்கு மற்றுமொரு பெண் மகவு பிறந்தது. அக்குழவிக்கு மாண்டவி என்னும் திருநாமஞ் சூட்டி, இருவரையும் மிக்க சிறப்புடன் பெற்றோர் வளர்த்து வந்தனர். அப்போது பச்சைப் பசுங்குழவிகளாக இருக்கும் அவர்களே, பின்னர்த் தங்கள் குலத்தை விளக்கும் குரு மணிகளாகப் போகின்றவர்கள் என்பதை அத்தம்பதி கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். அக்குழவிகளின் பிற்கால வாழ்க்கை உலகிற்குப் பெரிதும் பயனளிக்க வேண்டுமென் பது அப்பெற்றோரின் உண்மை நோக்கம். அதற்கேற்ப அவர் கள் தங்கள் மக்களை நாடோறும் தக்க நெறியில் பயில்வித் தார்கள். அறிவிற் சிறந்த பெற்றோரிடத்தில் வளர்ந்து வரும் மக்கள் நல்வழியில் திகழ்வதற்கு ஐயம் உளதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/14&oldid=1563332" இலிருந்து மீள்விக்கப்பட்டது