பக்கம்:வைதேகியார்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.வைதேகியாரின் மங்கைப் பருவம் இங்ஙனம் தக்க முறையிற் பாராட்டிச் சீராட்டி வளர்க் கப்பெற்ற நம் அன்னையார், தம் பிள்ளைப் பருவங்களைக் கடந்து, வளர்மதியென வளர்ந்தனர். பகீரதன் முயற்சியினால் கங்கை நில உலகிற்கு வந்த பின் எங்ஙனம் மற்ற நதிகளின் மகிமை குறைந்துவிட்டதோ, அங்ஙனமே ஜானகியார் தோன் றிய பிறகு மற்றத் தேவமாதர்களின் பெருமை குறைந்தது என்னுமாறு அவர் அழகிலும் ஒழுக்கத்திலும் சிறந்து திகழ்ந்தனர். 'தாயைப்போலும் சேய்,' என்னும் பழமொழி ஒன்று வழங்குகின்றதன்றோ? அதற்கு ஏற்பப் பூமியி னிடமாகத் தோன்றிய அவர் பொறுமையில் நில மகளுக்கு ஒப்பாய் விளங்கினர். மலரின் மணம் போன்று அவர் தூய எண்ணங்களும், நுண்ணிய அறிவும் நாடோறும் வளர்ந்தன. உடலொளியுடன் ஞான ஒளியும் அவர் மாட்டுத் திகழ்ந்தது. இவ்வாறு கண்டோர் மகிழ வளர்ந்து வந்த அம்மையாருக்கு. மங்கைப் பருவம் அணுகிற்று. அப்பருவத்தை அவர், பூக் கொய்தல், நீர் விளையாடல் முதலிய பல விளையாட்டுக்களில் இனிதே கழித்தனர். 6 குல் வித்தை கல்லாமலே பாதி வரும்,' என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே, தாம் வளர்ந்து வந்த குடும்பத் தின் பெருந்தன்மையும், உயர்ந்த நோக்கும், அற்ப விஷயங் களில் நுழையா மனத்திட்பமும் அவரிடம் பொருந்தி விளங் கின. தந்தையறிவு மகளறிவன்றோ? இம்முறையில் ஜானகி யார், ஜனகரின் நற்குணங்கள் யாவற்றையும் ஒருங்கு கவர்ந்துகொண்ட நிழலென மிளிர்ந்தனர். பெண்களுக்குரிய அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்னும் நாற்குணங்களும் THE KUPPUSWAMY SASTRI

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/15&oldid=1563333" இலிருந்து மீள்விக்கப்பட்டது