பக்கம்:வைதேகியார்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 வைதேகியார் அம்மையாரிடம் அடிமை பூண்டன. அவர் மூதறிவாளரிடம் மிக்க பணிவுடன் ஒழுகி வந்தனர். அவர் தாம் பெற்றோ ரிடங் காட்டிய பக்திக்கு எல்லையில்லை ; தம் தோழிகளிடம் கெழுமிய அன்பு பாராட்டினர். அந்நியரிடமும், சுற்றத்தா ரிடமும் அவர் பேசுங்கால், இன்சொல்லிற்கு அவரே இருப் பிடமெனக் கூறலாம். அவர் எளியோர்க்கு எளியராய் விளங் கினர் ; தம்மினுந் தாழ்ந்தோரிடம் பழகுங்கால், 'கீழோராயி னுந் தாழவுரை,' என்னும் அவ்வையார் வாக்கிற்கு ஓர் இலக் கியமாக அமைந்தனர்; தாம் உலகிற்றோன்றிய காரணத்தை யும், தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் நன்கு உணர்ந் திருந்தனர். ஆதலால், அவைகளுக்கேற்ப நடப்பதிலேயே அவர் கண்ணும் கருத்தும் சென்றன. மக்களுள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தைக் கொண்டே கடவுளால் உலகில் தோற்றுவிக்கப்படுகின்றனர். அது முற்றுப்பெற்ற பின் ஒரு விநாடியேனும், அவர் இவண் இரார். இது நம் சாஸ்திரத்தின் தத்துவமாகும். ஆனால், பல பேர் தம் பொறுப்புக்களையும் இயல்புகளையும் உணராது தம் காலத்தைக் கொன்னே கழித்துப் பயனற்றவராகின்ற னர். ஸ்ரீமந்நாராயணனையே மணக்க வேண்டுமெனக் கடுந் தவமியற்றி, அத்தவக் குறையை நிறைவுபடுத்த வந்த நம் அன்னையார் அங்ஙனம் தம் கடமையை உணரா திருப்பரோ? தவமும் தவமுடையார்க்கன்றோ கை கூடும்? ஆகவே, இப் போதும் ஓர் உத்தமப் புருஷனையே மணக்கவேண்டுமெனும் எண்ணம் என்றும் அவரைத் தூண்டிக்கொண்டே இருந் இத்தகைய பெருந்தன்மையோடு வளர்ந்து வரும் தம் புதல்வியாரைக் காணுந்தோறும் ஜனகர் ஏதோ ஓர் ஆழ்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/16&oldid=1563335" இலிருந்து மீள்விக்கப்பட்டது