பக்கம்:வைதேகியார்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைதேகியாரின் மங்கைப் பருவம் 13 சிந்தனையில் சிக்குண்டவர் போன்று காணப்படுவர். பல பற் றுக்களையும் விட்ட உத்தம ஞானியாராகிய ஜனகருக்கும் தம் அருமைப் புதல்வியாரின் பிற்கால வாழ்க்கையைச் சீர்மைப் படுத்தவேண்டுமென்னும் கவலை நீங்கிலது. ஆதலின், அவ் விஷயத்தை அவர் தாமே தனித்து யோசித்தலும், தம் மந்திரிகள் முதலிய பெரியோர்களுடன் ஆராய்தலும் செய்து வந்தனர். நம் பிராட்டியாரின் உடல் வனப்பும், குணச் சிறப்பும் எங்கும் பரந்தன. ஆதலால், அன்னைய யாரை மணக்க ஜனக ரிடம் வந்த மன்னர் எண்ணிலர். அரச அவையில் மணப் பேச்சும், காவலர் வரவும் நாளுக்குநாள் விஞ்சின. அது ஜனகருக்குப் பெருந்தொல்லையாகவே இருந்தது. ஆகவே, 'இதற்கு ஏதேனும் தக்க ஓர் உபாயம் தேடவேண்டும்,' என அவர் தீர்மானித்தனர். தம் அவையிலுள்ள மூதறிவாள் ரிடம் அதை இயம்பி அவர்களையும் தம்மகளாரின் திருமணத் தைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்குமாறு ஏற்பாடு செய்தனர். இது நிற்க. ஒருகால் தட்சன் மகளாகிய சதி என்பாள் சிவபிரானை மணக்க வேண்டி அப்பெருமானையே நோக்கித் தவமியற்றி னள். அவள் கருத்தின்படியே சிவபிரான் வந்து அவ்வம் மையை மணந்தனன். அங்ஙனம் மணந்தவன் சின்னாட்கள் அவளை விட்டு மறைந்திருக்க நேர்ந்தது. பின்பு சிவபிரான் அவண் போந்து தட்சன் அறியாமலே அவளை மயக்கித் தன் இருப்பிடங் கொண்டு போயினன். அதையுணர்ந்த தட்சன் மிக வருந்தித் தன் மகளைக் காணக் கைலாய த்திற்குச் சென்றபோது சிவபிரான் தன் கணங்களைக்கொண்டு அவனை அவமானப்படுத்தினன். அதனை அவன் மகளாகிய தாட்சா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/17&oldid=1563336" இலிருந்து மீள்விக்கப்பட்டது