பக்கம்:வைதேகியார்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வைதேகியார் டந்த யணியும் கவனிக்கவில்லை. அதனால், பெருஞ்சினமடை தக்கன் தான் இயற்றிய வேள்விக்குத் தன் மகளாகிய பார்வதியையும் சிவபிரானையும் அழைக்கவில்லை. இவ்விஷயத்தை நாரதராலறிந்த தாட்சாயணியாகிய சதி, சிவபிரானிடம் அரிதில் விடைபெற்றுத் தன் தந்தையின் யாகத்திற்குச் சென்றனள். ஆனால், தக்கன் உமா தேவியை வரவேற்கவேயில்லை. அவ்வவமானத்தைப் பொறாத சிவ பிரான் வீரபத்திரக் கடவுளை உண்டாக்கி, ஆங்கு அனுப்பி யாகத்திற்கு வந்திருந்த தேவர்களையும் மற்றையோரையும் நிலை குலைந்தோடும் வண்ணம் செய்வித்தனன். பிறகே சிவ பிரானுக்கு ஆறுதல் உண்டாயிற்று. அப்போர்ச் சமயத்தில் வைத்திருந்த வில்லைச் சிவபிரான் பின்பும் தாங்கி இருக்கக் கண்ட தேவர்கள் நடுங்கி அஞ்சினார்கள். ஆதலால், அவ் வில்லைச் சிவபிரான், ஜனகராஜன் குலத்தோன்றலாகிய ஒரு மன்னனிடம் வைத்துப்போயினன். அவ்வில் குலமுறையாக வந்து ஜனகருக்கு உரித்தாயிற்று. அது சிவபிரான் வில்லாதலின், அதை எடுத்து வளைப்ப வர்கள் மிக்க வன்மை பெற்றவர்களாக இருத்தல் வேண்டு மன்றோ? ஆதலின், அவ்வில்லை எடுத்து நாணேற்றுபவர் எவரோ, அவருக்கே சீதையை மணஞ்செய்து கொடுப்பதென மந்திரி முதலியோர் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தனர். அஃதே அறிவுடையோர் பலராலும் ஒப்புக்கொள்ளப்பட் டடது. அது முதல் இராவணன் முதலிய பல மன்ன ரும் அவண் வந்து, வில்லை நாணேற்ற முயன்றும் முடியாமை யின், தோற்று வெட்கித் தலை குனிந்து செல்லலாயினர். இங்ஙனம் பல நாட்கள் சென்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைதேகியார்.pdf/18&oldid=1563337" இலிருந்து மீள்விக்கப்பட்டது